முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கர் பச்சான் மகன் நடிக்கும் டக்கு முக்கு டிக்கு தாளம்

சனிக்கிழமை, 19 மார்ச் 2022      சினிமா
Image Unavailable

Source: provided

பி.எஸ்.என் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஜார்ஜ் டயஸ், சரவணராஜா இணைந்து தயாரிக்க, தங்கர்பச்சான் இயக்கத்தில் டக்கு முக்கு டிக்கு தாளம் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. விழாவில் இயக்குனர் தங்கர் பச்சான் பேசும்போது, ஒருவனிடம் பணம் நிறைய இருக்கிறது. ஆனால், அவனிடம் நிம்மதி இல்லை. இன்னொருவன் கையில் பணம் இல்லை. அவர்கள் என்னவாகிறார்கள் என்பதே இப்படத்தின் ஒருவரி கதை என்றார். என் மகன் விஜித் என்னுடைய இயக்கத்தில் நடிக்க மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தான். இல்லையென்றால் 6 வருடங்களுக்கு முன்பே நடிக்க வைத்திருப்பேன். முன்னதாக பேசிய நாயகன் விஜித் பச்சான், பத்திரிகையாளர்களும், மக்களும் பல நடிகர் நடிகைகளைப் பார்த்திருப்பீர்கள். அவர்களின் நிறை குறைகளை சுட்டிக் காட்டியது போல் என்னிடம் இருக்கும் நல்லது கெட்டதுகளை சுட்டிக் காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து