முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நாசர், விஷால் தலைமையிலான பாண்டவர் அணி மீண்டும் வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 20 மார்ச் 2022      சினிமா
Image Unavailable

Source: provided

சென்னை : தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நாசர், விஷால் தலைமையிலான பாண்டவர் அணி மீண்டும் வெற்றி பெற்றது. 

கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் 23-ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் கே.பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியினரும், நாசர் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிட்டனர். ஆனால் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தேர்தலை செல்லாது என்ற அறிவித்த நீதிமன்றம் வாக்கு எண்ணிக்கைக்கும் தடை விதித்தது. இதை தொடர்ந்து இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டு இருந்தன.

தேர்தல் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தொடர்ந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் தேர்தல் செல்லும் என்று அறிவித்து வாக்குகளை எண்ணவும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஏழுமலை என்ற துணை நடிகர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு (மார்ச் 20) சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள குட் ஷெப்பர்ட் பள்ளி வளாகத்தில் நடிகர் சங்க தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்த வாக்கு எண்ணிக்கை தேர்தல் அதிகாரி, நடிகர் சங்க தனி அதிகரி மற்றும் போட்டியிட்ட வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் எண்ணப்பட்டது.  இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

முன்னதாக ஓட்டு எண்ணிக்கை துவங்க பாக்யராஜ் தலைமையிலான அணியினர் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். காரணம் ஓட்டு பதிவான நாளின் போது எவ்வளவு ஓட்டுகள் பதிவானது. இப்போது எவ்வளவு ஓட்டுகள் உள்ளது என்பதை அறிவித்த பின்னர் ஓட்டு எண்ணிக்கையை துவங்கும் படி கேட்டனர். மேலும் பதிவான ஓட்டுகளை விட கூடுதலாக இப்போது ஓட்டு எண்ணிக்கை உள்ளது என இவர்கள் குற்றம் சாட்டினர். இதனால் எண்ணிக்கை நடைபெறும் இடத்திலிருந்து வெளியேறினர். இதனால் ஓட்டு எண்ணிக்கை சிறிதுநேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.

பின்னர் நீதிபதி தலையிட்டு பிரச்னையை தீர்த்து வைத்தார். இதையடுத்து ஓட்டு எண்ணிக்கை மீண்டும் துவங்கியது. முதற்கட்ட தகவலில் நாசர், விஷால் தலைமையிலான அணியினர் முன்னணியில் உள்ளதாக தகவல் வெளியாகியது. அதை தொடர்ந்து நாசர் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பாண்டவர் அணி சார்பாக துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பூச்சி முருகன் மற்றும் கருணாஸ் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!