முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே ஆண்டில் ரூ.3.74 லட்சம் கோடியாக உயர்வு: ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்

செவ்வாய்க்கிழமை, 22 மார்ச் 2022      வர்த்தகம்
Image Unavailable

முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ஒரு ஆண்டில் 24 சதவீதம் அதிகரித்துள்ளது. அதானியின் சொத்து மதிப்பு ஒரு ஆண்டில் ரூ.3.74 லட்சம் கோடி உயர்ந்துள்ளது. இதனை அடுத்து ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார்.

‘ஹருன் குளோபல் ரிச் லிஸ்ட்’ என்ற தலைப்பில் கோடீஸ்வரர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர். மொத்தம் 69 நாடுகளில் 2557 நிறுவனங்களை சேர்ந்த 3,381 கோடீஸ்வரர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி ஆகிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.7.86 லட்சம் கோடியாகும்.

அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி இந்த பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.6.18 லட்சம் கோடி ஆகும். இந்த பட்டியலில் நைகா நிறுவனர் பல்குனி நாயர் முதல் முறையாக இடம் பிடித்துள்ளார். முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ஒரு ஆண்டில் 24 சதவீதம் அதிகரித்துள்ளது. அதானியின் சொத்து மதிப்பு ஒரு ஆண்டில் ரூ.3.74 லட்சம் கோடி உயர்ந்துள்ளது. கடந்த ஒரு ஆண்டில் வாரத்துக்கு ரூ.6000 கோடி என்ற அளவில் இவரது சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது.

இந்த பட்டியலில் உள்ள கோடீஸ்வரர்களில் 2071 பேரின் சொத்து மதிப்பு ஒரு ஆண்டில் அதிகரித்துள்ளது. 942 கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு சரிந்துள்ளது. 490 கோடீஸ்வர்கள் புதிதாக இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள கோடீஸ்வரர்களில் 258 பேர் இந்தியாவில் உள்ளனர். இதில் 58 பேர் புதிதாக சேர்ந்துள்ளனர். உலக அளவில் அதிக கோடீஸ்வரர்களை உருவாக்கும் நாடுகள் வரிசையில் இந்தியா 3-ம் இடத்தில் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து