முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை சவரனுக்கு 280 ரூபாய் அதிகரிப்பு

செவ்வாய்க்கிழமை, 22 மார்ச் 2022      வர்த்தகம்
Image Unavailable

சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.38,624-க்கு விற்பனையானது.

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே உயர்ந்த படியே இருந்து வருகிறது. கடந்த மாதம் 24-ந் தேதி உக்ரைன்- ரஷியா இடையே போர் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை குறைவதும், உயர்வதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் நேற்று காலை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 280 உயர்ந்து ரூ.38 ஆயிரத்து 624-க்கு விற்பனையானது. ஒரு கிராம் ரூ. 4,828 ஆக உள்ளது. தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.800 அதிகரித்து ரூ. 73 ஆயிரத்து 400 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 73.40க்கு விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து