முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. கட்சி அமைப்பு தேர்தல்: 25 மாவட்டங்களுக்கு தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

வியாழக்கிழமை, 24 மார்ச் 2022      அரசியல்
Image Unavailable

கட்சி அமைப்பு தேர்தலை முன்னிட்டு 25 மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நியமித்துள்ளனர்.

அ.தி.மு.க.வில் 25 மாவட்டங்களுக்கான ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி கழக நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான முதல்கட்ட தேர்தல் வருகிற 27-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இந்த தேர்தலை நடத்துவதற்காக மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பொறுப்பாளர்களை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நியமித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

ராணிப்பேட்டை மாவட்டம்- சோமசுந்தரம், மைதிலி, திருநாவுக்கரசு, வாலாஜாபாத் கணேசன். வேலூர் மாநகர்- வேணுகோபால், சிட்லபாக்கம் ராஜேந்திரன், வேலூர் புறநகர்-டி.கே.எம். சின்னையா, மரகதம் குமரவேல், எஸ்.ஆறுமுகம். திருப்பத்தூர்-பா.வளர்மதி, வெங்கட்ராமன், கே.பி.கந்தன், திருவண்ணா மலை வடக்கு-சுப்பிரமணியன், தவமணி, திருவண்ணாமலை தெற்கு சேதுராமன், திருஞானசம்பந்தம். கள்ளக்குறிச்சி- கே.கோபால், பவுன்ராஜ். சேலம் புறநகர்- சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ., பி.கே. வைரமுத்து, சேலம் புறநகர்- தாமரை ராஜேந்திரன், ஆ.இளவரசன்.

தருமபுரி-ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ., சிவா, ராஜமாணிக்கம். கிருஷ்ணகிரி கிழக்கு- கே.ஏ.கோபால், சிறுணியம் பலராமன், கிருஷ்ணகிரி மேற்கு - பா.பென்ஜமின், எஸ்.அப்துல்ரகீம். நாமக்கல்-கமலக்கண்ணன், அருண்மொழி தேவன் எம்.எல்.ஏ.. ஈரோடு மாநகர்- என்.முருகுமாறன், கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ., ஈரோடு புறநகர் கிழக்கு- சொரத்தூர் ராஜேந்திரன், கோ.சூரியமூர்த்தி, ஈரோடு புறநகர் மேற்கு-எம்.சி.சம்பத், பு.தா.இளங்கோவன். திருப்பூர் மாநகர்- மாபா. பாண்டியராஜன், வி.அலெக்சாண்டர், திருப்பூர் புறநகர் கிழக்கு- மாதவரம் மூர்த்தி, ஜி.கே.இன்பராஜ், திருப்பூர் புறநகர் மேற்கு-திருத்தணி கோ.அரி, பி.வி.ரமணா.

கரூர்-வரகூர் அருணாசலம், ஆர்.டி.ராமச்சந்திரன். கோவை மாநகர்-ரத்தினவேல், வெல்லமண்டி நடராஜன், கோவை புறநகர் வடக்கு-என்.ஆர்.சிவபதி, எம்.பரஞ்ஜோதி, கோவை புறநகர் தெற்கு-எஸ்.வளர் மதி, ப.குமார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து