முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏப்ரலில் வெளியாகிறது கே.ஜி.எஃப் 2

சனிக்கிழமை, 26 மார்ச் 2022      சினிமா
Image Unavailable

Source: provided

ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் அதன் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் படம் 'கே ஜி எஃப் சாப்டர் 2'. இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி, 250 கோடி ரூபாய் வசூலித்து இந்திய அளவில் சாதனை படைத்தது. இதனையடுத்து ‘கே ஜி எஃப் 2’  திரைப்படம், வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியாகிறது. இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகி வரும் 'கே ஜி எஃப் சாப்டர்  2' படத்தில் கதையின் நாயகனாக ராக் ஸ்டார் யஷ்  நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார். இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புவன் கௌடா ஒளிப்பதிவுக்கு ரவி பர்சூர் இசை அமைத்திருக்கிறார். அண்மையில், இப்படத்தின் டீஸர் வெளியாகி 240 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்தது. இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்டம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து