முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பக்தர்களின் சிபாரிசு கடிதங்கள் இன்று ஏற்கப்படாது: நாளை வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து: திருப்பதி தேவஸ்தானம்

ஞாயிற்றுக்கிழமை, 27 மார்ச் 2022      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பதி கோவிலில் இன்று (திங்கட்கிழமை) சாமி தரிசனத்துக்காக பக்தர்கள் கொண்டு வரும் சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது. மேலும் நாளை 29-ம் தேதி வி.ஐ.பி. பிரேக் தரிசனமும் ரத்து செய்யப்படுகிறது.

இது குறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

யுகாதி பண்டிகையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 29-ம்  தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது. அதையொட்டி இன்று (திங்கட்கிழமை) சாமி தரிசனத்துக்காக பக்தர்கள் கொண்டு வரும் சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது. மேலும் நாளை 29-ம் தேதி வி.ஐ.பி. பிரேக் தரிசனமும் ரத்து செய்யப்படுகிறது. எனவே திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு பக்தர்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!