முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முழு அடைப்பு போராட்டத்தால் புதுச்சேரியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

செவ்வாய்க்கிழமை, 29 மார்ச் 2022      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுச்சேரி : முழு அடைப்புப் போராட்டம் காரணமாக, புதுச்சேரியில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு, தனியார் பேருந்துகள் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டதால் நேற்று பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

தொழிலாளர் சட்டத் தொகுப்பை கைவிட வேண்டும், மின்சார திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பினர் 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.

இதேபோல் புதுச்சேரியிலும் திமுக, காங்கிரஸ், சிபிஐ, விசிக உள்ளிட்ட மதசாற்பற்ற கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் நேற்று முன்தினம் வேலை நிறுத்தமும், நேற்று முழு அடைப்பு (பந்த்) போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்திருந்தன. இதன்படி நாடு முழுவதும் முதல் நாள் போராட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. தொடர்ந்து 2ம் நாளாக நேற்றும் வேலை நிறுத்த போராட்டம் நீடித்தது. இந்த நிலையில் புதுச்சேரியில் எதிர்க்கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று பொது வேலை நிறுத்தத்துடன் சேர்த்து காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

முழு அடைப்பு போராட்டம் காரணமாக புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள முக்கிய வீதிகளான நேரு வீதி, காந்தி வீதி, அண்ணா சாலை உள்ளிட்ட இடங்களில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. இதேபோல் கிராமப்புறங்களிலும் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் தனியார் பேருந்துகள் முற்றிலுமாக இயக்கப்படவில்லை. ஆட்டோ, டெம்போ போன்றவைகளும் ஓடவில்லை. ஒருசில தமிழக அரசு பேருந்துகள் மற்றும் புதுச்சேரி அரசு பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டன. இதனால் பிரதான சாலைகள், முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

இந்த முழு அடைப்புப் போராட்டம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. புதுச்சேரியில் நேற்று ஒரு சில தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து