முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு

புதன்கிழமை, 30 மார்ச் 2022      இந்தியா
Image Unavailable

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வால், 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 68.63 லட்சம் ஓய்வுபெற்ற ஊழியர்கள் பயனடைவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையை ஏற்று மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால் மத்திய அரசுக்கு கூடுதலாக 9544.5 கோடி ரூபாய் செலவினம் ஏற்படும். ஜனவரி 1-ம் தேதியில் இருந்து முன் தேதியிட்டு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டின் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை  உயர்த்தி வழங்கப்படும். நாட்டில் தற்போது எரிபொருள் விலை உயர்வு மற்றும் பணவீக்கம் அதிகரித்து இருக்கும் இந்த சூழலில், அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டு இருப்பது ஆயிரக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு சற்று நிவாரணம் அளிப்பதாக அமைந்துள்ளது. 

 

கொரோனா பெருந்தொற்று சூழல் காரணமாக அகவிலைப்படி உயர்வு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. கடந்த ஜூலை 2021 ஆம் ஆண்டு மத்திய அகவிலைப்படியை 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து