முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடுத்தர ரக வகையை சேர்ந்தது: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி

புதன்கிழமை, 30 மார்ச் 2022      இந்தியா

தரையில் இருந்து பாய்ந்து சென்று வானில் உள்ள இலக்கை தாக்கவல்ல நடுத்தர ரக ஏவுகணை வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.

தரையில் இருந்து பாய்ந்து சென்று வானில் உள்ள இலக்கை தாக்கவல்ல நடுத்தர ரக ஏவுகணையை இந்தியா தயாரித்துள்ளது. இந்த ராணுவ பயன்பாட்டு வடிவ ஏவுகணை வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது. ஒடிசா மாநிலம் பாலசோரில் உள்ள சந்திப்பூர் ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் இச்சோதனை நடந்தது. வானில் அதிவேகத்தில் பறந்து சென்ற இலக்கு பொருளை அந்த ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்ததாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தரையில் இருந்து பாய்ந்து சென்று வானில் உள்ள இலக்கை தாக்கவல்ல நடுத்தர ரக ஏவுகணை இரண்டு முறை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக  பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) தெரிவித்துள்ளது. இருவேறு சந்தர்ப்பங்களில் இரண்டு முறை  நடத்தப்பட்ட சோதனைகளில் வெவ்வேறு இலக்குகளை அந்த ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த ஏவுகணை சோதனைகள் நேற்று காலை 10.15 மற்றும் 11 மணிக்கு வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தை மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வாழ்த்தியுள்ளார். இந்த வெற்றிகரமன சோதனைகள் மூலம், நம் பாதுகாப்பு அமைப்பு மீதான  நம்பகத்தன்மை மீண்டும் நிரூபனமாகியுள்ளது என்று அவர் தெரிவித்தார். முன்னதாக, இந்த ராணுவ பயன்பாட்டு வடிவ ஏவுகணை, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் வான்வெளி நிறுவனம்(ஐ ஏ ஐ) மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து இந்திய ராணுவத்தின் பயன்பாட்டுக்காக இந்த ஏவுகணையை தயாரித்துள்ளன.  இந்த இராணுவ ஆயுத அமைப்பு மொபைல் லாஞ்சர் அமைப்பு , பல செயல்பாட்டு ரேடார் மற்றும் பிற வாகனங்களை உள்ளடக்கியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து