முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பதவிகாலம் முடியும் 72 எம்.பி.க்களுக்கு பாராட்டு: அனுபவத்தை நாட்டின் வளர்ச்சிக்காக பயன்படுத்த பிரதமர் வேண்டுகோள் !

வியாழக்கிழமை, 31 மார்ச் 2022      இந்தியா
MP-Modi 2022 03 31

பதவிகாலம் முடியும் 72 மேல்சபை எம்.பி.க்களுக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி, எம்.பி.களுக்கு நிறைய அனுபவம் இருக்கும். சில நேரங்களில் கல்வி அறிவை விட அனுபவ அறிவு வலிமைமிக்கதாக இருக்கும் என்றும், அனுபவத்தை நாட்டின் வளர்ச்சிகாக அவர்கள் பயன்படுத்த வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

டெல்லி மேல்சபையில் மார்ச் மாதம் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் 7 நியமன உறுப்பினர்கள் உள்பட 72 எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. ஏ.கே.அந்தோணி, அம்பிகா சோனி, ப.சிதம்பரம், ஆனந்த் சர்மா, ஜெயராம் ரமேஷ், சுரேஷ் பிரபு, பிரபுல் படேல், சுப்பிரமணியசாமி, பிரசன்னா ஆச்சார்யா, சஞ்சய் ராவத், நரேஷ் குஜ்ரால், சதீஷ் சந்திர மிஸ்ரா, மேரிகோம், சுவப்னா தாஸ் குப்தா, நரேந்திர யாதவ் உள்பட 72 மேல்சபை எம்.பி.க்களின் பதவி காலம் முடிவடைந்துள்ளது. இதையொட்டி பாராளுமன்ற மேல்சபையில் அவர்களுக்கு நேற்று வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

72 மாநிலங்களவை எம்பிக்களை மக்களவையில் பிரதமர் மோடி வாழ்த்தி பேசினார். அப்போது அவர் பேசியதாவது., ஓய்வு பெறும் உறுப்பினர்கள், தங்கள் அனுபவத்தை நாட்டின் வளர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டும். அனுபவம் வாய்ந்த உறுப்பினர்களின் இடத்தை தற்போதைய எம்பிக்கள் பூர்த்தி செய்ய வேண்டும். மூத்த உறுப்பினர்களிடம் இருந்து கற்று கொண்டவற்றை நாமும் பின்பற்றுவோம். பதவிக்காலம் முடியும் நமது எம்பிக்களுக்கு நிறைய அனுபவம் இருக்கும். சில நேரங்களில் கல்வி அறிவை விட அனுபவ அறிவு வலிமை மிக்கதாக இருக்கும். பதவிக்காலத்தை நிறைவு செய்யும் எம்பிக்கள் மீண்டும் எம்பியாக அவைக்கு வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 

ப.சிதம்பரம், நிர்மலா சீதாராமன், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட எம்பிக்களை பிரதமர் மோடி பாராட்டினார். ஓய்வு பெறும் 72 உறுப்பினர்கள் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு, துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோருடன் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து