முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அன்னாசி, பலா, வாழை பழத்தில் இருந்து குறைந்த போதை தரும் மதுவை தயாரிக்க கேரள அரசு னுமதி

வியாழக்கிழமை, 31 மார்ச் 2022      இந்தியா
Cashew-pineapple-2022-03-31

Source: provided

திருவனந்தபுரம் : முந்திரி, பலா, அன்னாசி மற்றும் வாழை பழங்களில் இருந்து குறைந்த போதை தரும் மதுவை தயாரிக்க அனுமதி வழங்க கேரள அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் பழ வகைகளில் இருந்து குறைந்த போதை தரும் மது வகைகளை தயாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதுதொடர்பாக ஆலோசிக்க முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் புதிய மது கொள்கைக்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டது. புதிய மது கொள்கையில் கேரளாவில் மது தேவை அதிகரித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

எனவே இந்த தேவையை ஈடுகட்டும் வகையில் கூடுதல் மது உற்பத்தி ஆலைகள் அமைக்க அனுமதி வழங்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மது தயாரிப்பு ஆலைகளில் குறைந்த போதை தரும் மதுவை பழங்களில் இருந்து தயாரிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி முந்திரி, பலா, அன்னாசி மற்றும் வாழை பழங்களில் இருந்து குறைந்த போதை தரும் மது தயாரிக்க அனுமதி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

 

மது உற்பத்தியை அதிகரிக்கும்போது அதற்கேற்ப சில்லரை விற்பனை கடைகளையும் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதுதவிர ஐ.டி. நிறுவனங்களில் பார் மற்றும் ஒயின் பார்லர்கள் நடத்தவும் அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. குறைந்தது 10 ஆண்டு அனுபவமுள்ள ஐ.டி. நிறுவனங்களுக்கே இந்த அனுமதி வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து