முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி நேரு பூங்காவில் வாக்கிங் சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலின் : செல்பி எடுத்துக்கொண்ட மக்கள்

சனிக்கிழமை, 2 ஏப்ரல் 2022      இந்தியா
CM-1 2022 04 02

Source: provided

புதுடெல்லி : 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், நேரு பூங்காவில் நேற்று  காலை நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது, அங்கிருந்த பொது மக்கள் அவருடன் செல்பி எடுத்து கொண்டனர்.

3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன்,பியூஷ் கோயல், நிதின் கட்காரி உள்ளிட்டோரை சந்தித்தார். நேற்று முன்தினம் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலையும் அவர் சந்தித்து பேசினார். 

இந்நிலையில், நேற்று காலை, நேரு பூங்காவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அங்கு உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த பொது மக்கள், ஸ்டாலினுடன் கைகுலுக்கியும், செல்பி எடுத்து கொண்டனர். இது குறித்த வீடியோ மற்றும் புகைப்படம் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து