முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரி உயர்வுக்கு தலைவர்கள் கடும் கண்டனம்: மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் சொத்து வரி குறைவே : டெல்லியில் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

சனிக்கிழமை, 2 ஏப்ரல் 2022      இந்தியா
KN-Nehru 2022 04 02

Source: provided

புதுடெல்லி : வரி உயர்வுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் சொத்து வரி உயர்வு மிகமிகக் குறைவாகவே இருக்கிறது என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

தமிழகத்தில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், டெல்லியில் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், " இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில், தமிழகத்தை விட 50 சதவீதம், 100 சதவீதத்துக்கும் மேலாக வரி வசூலிக்கப்படுகிறது. தமிழக முதல்வர் ஏழை எளிய மக்கள் அதிகம் பாதிக்கப்படாத அளவிற்கு, இந்த வரி உயர்வை ஏற்படுத்திக் கொடுத்தார். அதுவும் தற்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்ற, நகராட்சித் தலைவர்கள், நகராட்சி பணத்திலேயே நகரங்களை முன்னேற்றுவதற்காக இதன்மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே இதனை பலர் அதிகமாக விமர்சிக்கின்றனர். குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர், திமுகவுக்கு வாக்களித்தவர்களுக்கான பரிசு என்று கூறுகிறார்.

இந்த வரி உயர்வை 2018-ம் ஆண்டு, அதிமுக ஆட்சியில் 200 சதவீதம் உயர்த்தியிருந்தார்கள். தேர்தல் வருகிறது என்ற காரணத்தால், முழுமையாக அதை நிறுத்திவைத்தவர்கள்தான் அவர்கள். அதிமுக ஆட்சியின்போது ஏழை, பணக்காரர்கள் என்று இல்லாமல், ஒரே வகையில் வரி உயர்வு செய்யப்பட்டது. ஆனால் தமிழக முதல்வர் ஏழைகளுக்கு குறைவாகவும், கொஞ்சம் வசதி படைத்தவர்களுக்கு 1800 சதுர அடிக்கு மேல் உள்ள கட்டிடங்களுக்கு கூடுதலாகவும் வரியை உயர்த்தி இருக்கிறார்.

சென்னையில் உள்ள 54 லட்சம் பேரில் முக்கால்வாசி பேர் 600 சதுர அடிக்கு குறைவான இடத்தில் வசிக்கின்றனர். அவர்களுக்கு இதுவரை 100 ரூபாய் வரி என்றால், தற்போது ரூ.125 என்கிற அளவில் வரி உயர்த்தப்பட்டுள்ளது. 1800 சதுர அடிக்கு மேல் இருப்பவர்களுக்கு 50 சதவீத உயர்வும், அதே 1800 சதுர அடிக்கு மேல் முக்கிய வீதிகளில் வசிப்பவர்களுக்கு 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஸ்லாப் சிஸ்டத்தின் அடிப்படையில்தான் இந்த வரி உயர்த்தப்பட்டிருக்கு. எனவே மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் வரி உயர்வு மிகமிகக் குறைவாகவே இருக்கிறது" என்று அவர் விளக்கிக் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து