முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் தி.மு.க. அலுவலகத்தை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின் : சோனியா, அகிலேஷ் உள்ளிட்டோர் பங்கேற்பு

சனிக்கிழமை, 2 ஏப்ரல் 2022      இந்தியா
Stelin 2022 03 05

Source: provided

புதுடெல்லி : டெல்லியில் தி.மு.க. அலுவலகமான அண்ணா-கலைஞர் அறிவாலய கட்டிடத்தை நேற்று மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதில் சோனியா காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

பாராளுமன்றத்தில் 7 உறுப்பினர்களுக்கு மேல் உள்ள கட்சிகளுக்கு டெல்லியில் கட்சி அலுவலகம் கட்டுவதற்கு இடம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்ததின் அடிப்படையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது கடந்த 2013-ம் ஆண்டு டெல்லி தீனதயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் தி.மு.க. கட்சிக்கு அலுவலகம் அமைக்க இடம் ஒதுக்கி கொடுக்கப்பட்டது.

அந்த இடத்தில் 3 தளங்களுடன் கூடிய பிரமாண்ட அறிவாலய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. உயரமான 4 தூண்களை கொண்ட முகப்பு, நுழைவாயிலில் அண்ணா-கலைஞர் இருவரது மார்பளவு சிலைகள், கட்சி நிர்வாகிகள் ஆலோசிப்பதற்கான இடம், தலைவர், பொதுச்செயலாளர் உள்ளிட்ட தலைமை கழக நிர்வாகிகளுக்கான அறைகள், பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் பிரமாண்ட நூலகம், எம்.பி.க்கள், கட்சி நிர்வாகிகள் தங்குவதற்கான அறைகள் என விசாலமான வசதிகளுடன் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்துக்கு அண்ணா-கலைஞர் அறிவாலயம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த அறிவாலய கட்டிட திறப்புவிழா நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு கட்சியின் பொதுச்செயலாளரான அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்கினார். டி.ஆர்.பாலு எம்.பி. முன்னிலை வகித்தார். தி.மு.க. தலைவரும் தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அண்ணா- கலைஞர் அறிவாலயம் அலுவலகத்தை திறந்து வைத்து, கட்சி அலுவலகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்றினார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மார்பளவு சிலையை திமுக எம்.பி., டி.ஆர். பாலு திறந்து வைத்தார். மார்பளவு அண்ணா சிலையை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார்.

விழாவில் சோனியா காந்தி, அகிலேஷ் யாதவ், வைகோ, ப.சிதம்பரம், திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்துகொண்டனர். விழாவில் பங்கேற்ற அரசியல் கட்சி தலைவர்களுக்கு சால்வை அணிவித்து, நினைவுப் பரிசுகள் வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து