முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காசி விஸ்வநாதர் கோவிலில் நேபாள பிரதமர், மனைவியுடன் வழிபாடு

ஞாயிற்றுக்கிழமை, 3 ஏப்ரல் 2022      இந்தியா
Sher-Bahadur-Duba 2022 04 0

Source: provided

வாரணாசி : உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தூபா தனது மனைவி அர்ஜு தூபாவுடன் வழிபாடு மேற்கொண்டார்.

நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தூபா இந்தியாவில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.  இதன்படி டெல்லி வந்து சேர்ந்த அவர் மத்திய வெளி விவகார துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார்.  டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் நேற்று முன்தினம் நேபாள பிரதமர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.  அதன் பின்னர் பிரதமர் மோடி மற்றும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோரை சந்தித்து பேசினார்.  இதுதவிர பிற நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொண்டார்.

இந்த பயணத்தில், இரு நாட்டு உறவுகள், வளர்ச்சி, வர்த்தகம், பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட விஷயங்கள் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தூபா தனது மனைவி அர்ஜு தூபாவுடன் உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று நேற்று வழிபாடு மேற்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து