முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பூசாண்டி வரான் - விமர்சனம்

திங்கட்கிழமை, 4 ஏப்ரல் 2022      சினிமா
Hamsini 2022 04 04

Source: provided

பண்டைய மன்னர் காலத்தில் சைவ வைணவர்களிடையே போட்டிகள் ஏராளம். அப்படிப்பட்ட சூழலில் ஆட்சிக்கு வந்த ஒரு வைணவ மன்னர், சைவர்கள் மீது கட்டுப்பாடுகள் விதித்தார். சிவனடியார்கள் நெற்றியில் திருநீறு அணியக்கூடாது என்றும் கட்டளை பிறப்பித்துள்ளார். அதற்கு எதிராகக் களமிறங்கிய சிவனடியார்கள் நெற்றியை விட்டுவிட்டு உடல் முழுதும் திருநீறு பூசிக்கொண்டிருக்கிறார்கள். அப்படிப் பூசிக்கொண்டவர்கள் தான் பூச்சாண்டிகள் என்றழைக்கப்பட்டனர். இதனை கருவாக் கொண்டு உருவாகியுள்ள படம்தான் இந்த பூசாண்டி வரான். இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் மலேசியாவைச் சேர்ந்த ஜே.கே.விக்கி. தொல் பொருட்களைத் தேடித் சேகரிக்கும் ஒருவருக்கு பழங்கால நாணயம் ஒன்று கிடைக்கிறது. அதை வைத்துக் கொண்டு ஆவிகளோடு பேசும் விளையாட்டை அவரும் அவருடைய நண்பர்களும் விளையாடுகின்றனர். அதன் விளைவாக அவர்களில் ஒருவர் திடீரென மரணமடைகிறார். அதனால் அந்த நாணயத்தின் பூர்வீகத்தை அறிய உயிரைப்பணயம் வைத்துப் புறப்படுகின்றனர். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் கிளைமாக்ஸ். நண்பர்களாக வரும் திணேஷ் சாரதி கிருஷ்ணன், லோகநாதன், கணேசன் மனோகரன் ஆகியோர் மிக இயல்பான பாத்திரங்களாக நடித்துள்ளனர். ஆராய்ச்சி மாணவியாக வரும் ஹம்சினி பெருமாள் படத்துக்குத் திருப்புமுனையாக இருக்கிறார். ஒளிப்பதிவாளர் முகமதுஅலி இதுவரை பார்த்திராத மலேசியப்பகுதிகளை நமக்குக் காட்டியிருக்கிறார். ஷாவின் இசையும் ஜேசனின் ஒலிவடிவமைப்பும் திகில் ஏற்படுத்துகின்றன. ஆவிகள் பற்றி எழுதும் பத்திரிகையாளராக வரும் மிர்ச்சி ரமணாவும்  இயல்பாக  நடித்திருக்கிறார். மொத்தத்தில் இந்த பூச்சாண்டி ஒரு தரமான படைப்பு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து