முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராம் கோபால் வர்மாவின் காதல் காதல்தான்

திங்கட்கிழமை, 4 ஏப்ரல் 2022      சினிமா
Ramgopal-Varma 2022 04 04

Source: provided

ஆண்களை வெறுக்கும் இரு பெண்களுக்குள் காதல் வர, ஓரே பாலின காதலை காப்பாற்றிக்கொள்ள அவர்கள் போராடுவதே இந்தப்படம். இந்தியாவின் முதல் லெஸ்பியன் க்ரைம் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. Artsee Media / Rimpy Arts International இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இந்தி மொழியில் தயாரான இப்படம் ஏப்ரல் 8 ஆம் தேதி,  தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.  தமிழ் பதிப்பின் முன்னோட்ட வெளியீட்டை ஒட்டி இயக்குநர் ராம் கோபால் வர்மா மற்றும் நாயகிகள் நைனா கங்குலி, அப்ஷரா ஆகியோர் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய இயக்குனர் ராம் கோபால் வர்மா, இரண்டு லெஸ்பியன் பெண்களின் பிரச்சனை என்ன என்று யோசிக்கும்போது அதனை மையமாக வைத்து இதை உருவாக்கலாம் என்று இப்படத்தை எடுத்தோம் என்றார். படமாக்குவதில் நிறைய சவால்கள் இருந்தது. இரண்டு ஹிரோயின்களை வைத்து டூயட் பாடல் எடுப்பதே இந்திய சினிமாவில் வித்தியாசம் தான் என்றார். ஏப்ரல் 8 அன்று வெளியாக உள்ள இப்படத்தை குரபரன் இண்டர்நேஷனல் நிறுவனம் தமிழகத்தில் வெளியிடுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து