முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செல்ஃபி விமர்சனம்

திங்கட்கிழமை, 4 ஏப்ரல் 2022      சினிமா
Jeevi-Prakash 2022 04 04

Source: provided

கல்வி விற்கப்படுகிறது. போதிய விலை கொடுக்க முடிந்தவர்கள் கல்வியை பெறலாம். இல்லையென்றால் வீட்டிலிருங்கள் என்ற கருத்தை மய்யமாக வைத்து உருவாகியுள்ள படமே செல்ஃபி திரைப்படம். அப்பாவின் வற்புறுத்தலால் வேண்டா வெறுப்பாக இன்ஜினியரிங் கல்லூரியில் சேரும் ஜீவி பிரகாஷுக்கு படிப்பில் நாட்டம் இல்லாததால் பார்ட் டைமாக சம்பாதிக்கும் முயற்சியில் இறங்குகிறார். இதற்காக பிரபல தனியார் மருத்துவக் கல்லூரியில் மேனேஜ்மெண்ட் சீட் வாங்கித் தரும் புரோக்கர் வேலையை தன் நண்பர்களுடன் இணைந்து செய்கிறார். அப்படி சீட் வாங்கித் தரும் போது ஏற்படும் ஒரு பிரச்சனையில் நண்பன் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் அவருக்கு கல்லூரி தரப்பிலிருந்தும் சிக்கல் ஏற்படுகிறது. அந்த சிக்கலில் இருந்து ஜீவி பிரகாஷ் மீண்டாரா, இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை. தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத ஒரு கதையைத் திறம்படக் கையாண்டு அதை ரசிக்கும்படி கொடுத்துள்ளார் இயக்குநர் மதிமாறன். வழக்கமான நாயகியாக வந்து செல்கிறார் நடிகை வர்ஷா பொல்லம்மா. பக்காவான ஒரு கார்ப்பரேட் வில்லனாக வந்து அசத்தியிருக்கிறார் கௌதம் மேனன். ஜீவி பிரகாஷின் தந்தையாக வரும் வாகை சந்திரசேகர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தன் நடிப்பால் பார்வையாளர்களைக் கலங்க வைத்துள்ளார். தங்கதுரை காமெடி மட்டுமல்லாது சீரியஸான நேரத்திலும் சிறப்பாக நடித்து கவனம் பெறுகிறார்.  ஜீவி பிரகாஷ் இசையில் பாடல்கள் சுமார் ரகமே, பின்னணி இசை படத்திற்கு வேகம் கூட்டியுள்ளது. படத்தின் கதையும், கதைக் களமும் புதியதாக இருப்பதாலும். அது சமூகத்திற்கு அவசியமான ஒன்றாக இருப்பதாலும், இப்படம் தவிர்க்க முடியாத படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.  மொத்தத்தில்  இந்த செல்ஃபீ  கல்வி கொள்ளையர்களின் சுயரூபம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து