முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓடிடியில் வெளியாகும் டாணாக்காரன்

திங்கட்கிழமை, 4 ஏப்ரல் 2022      சினிமா
OTT 2022 04 04

Source: provided

விக்ரம் பிரபு நடிப்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் அறிமுக இயக்குனர் தமிழ் இயக்கியுள்ள டாணாக்காரன் திரைப்படம் வரும் 8ஆம் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது. இந்நிலையில் படக்குழுவினர் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய இயக்குனர் தமிழ் , டாணாக்காரன் படத்தில்  காவலர்களின் பயிற்சி முகாமில் நடைபெறக்கூடிய உண்மை சம்பவங்களை படமாக்கி இருப்பதாக கூறினர். அத்துடன் காவலர்கள் மீதான மக்கள் பார்வையை மாற்ற இந்த படம் ஒரு தொடக்கமாகவும்,  விவாதத்தை தொடங்கி வைக்கும் படமாகவும் இருக்கும் என கூறினார். தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, இந்தப் படத்தை மொழிகளை கடந்து அனைத்து மாநில மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என நினைத்தோம். அத்துடன் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு, பெரிய படங்களுக்கு மட்டும் செல்ல மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர், சிறிய படங்களுக்கு வருவதை தவிர்க்கின்றனர், இது கடந்த ஆறுமாதமாக நிகழ்கிறது. இதன் காரணமாகவே டாணாக்காரன் படத்தை ஓ.டி.டி மூலம் மக்களை கொண்டு சேர்க்க வேண்டும் என நினைத்தோம் என கூறினார். இந்த படத்தில் லால், எம். எஸ். பாஸ்கர், அஞ்சலி நாயர், அன்பரசன், மது சூதன் ராவ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து