முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வன்முறை காட்சிகள் அதிகமாம்: விஜய்யின் 'பீஸ்ட்' படத்தை தடை செய்த குவைத் அரசு!

செவ்வாய்க்கிழமை, 5 ஏப்ரல் 2022      சினிமா
Vijay-2022-04-05

வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதாக கூறி விஜய்யின் 'பீஸ்ட்' படத்தை வெளியிட குவைத் அரசு தடை செய்துள்ளது. நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி இருக்கும் பீஸ்ட் திரைப்படம் வெளியாவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் செல்வராகவன், ஷான் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, அபர்ணா தாஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இந்த திரைப்படம் 5 மொழிகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தமிழில் உருவாகி உள்ள பீஸ்ட் படத்தை தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர். சமீபத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலர் அனைவரையும் கவர்ந்து ஹிட் அடித்துள்ளது. இந்நிலையில் வெளியீட்டிற்கு தயாராகவுள்ள பீஸ்ட் திரைப்படத்தை குவைத் அரசு தடை செய்துள்ளது. வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதாக கூறி தடை விதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து