முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆங்கிலத்திற்கு மாற்று உள்ளூர் மொழிகள் அல்ல: ஹிந்திதான் நாட்டின் அதிகாரபூர்வ மொழி: மத்திய அமைச்சர் அமித் ஷா சர்ச்சை பேச்சு

வெள்ளிக்கிழமை, 8 ஏப்ரல் 2022      இந்தியா
Amitsha 2022-04-08

ஹிந்தியைத்தான் ஆங்கிலத்துக்கு மாற்றாக கருத வேண்டும். உள்ளூர் மொழிகளை அல்ல. இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும், ஹிந்திதான் நாட்டின் அதிகாரபூர்வ மொழியாகும்" என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்தில் நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார். அதில் அவர் பேசும்போது, “நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக ஹிந்தியை அலுவல் மொழியாக மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்தியாவின் மொழியான ஹிந்தியை வெவ்வேறு மாநிலங்களில் உள்ள குடிமக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள பயன்படுத்த வேண்டும். ஹிந்தியைத்தான் ஆங்கிலத்துக்கு மாற்றாகக் கருத வேண்டும்.உள்ளூர் மொழிகளை அல்ல. 

இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும், இந்திதான் நாட்டின் அதிகாரபூர்வ மொழியாகும். ஆட்சியை நடத்த இந்திதான் தொடர்பு மொழியாக இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார். இது மொழியின் முக்கியத்துவத்தை மேலும் அதிகரிக்கும். அமைச்சரவையின் 70% நிகழ்ச்சி நிரல்கள் இனி ஹிந்தியில் தான் தயாராகும். வடகிழக்கின் 8 மாநிலங்களிலும் 10-ம் வகுப்பு வரை ஹிந்தி வரும் நாட்களில் கட்டாயமாக்கப்படும். மாணவர்கள் இந்தி மொழித் தேர்வுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்”என்று தெரிவித்தார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இந்தப் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் அதிகரித்து வருகின்றன. அமித் ஷாவின் பேச்சைத் தொடர்ந்து #stopHindiImposition என்று பலரும் ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து