முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லை பெரியாறு அணை பராமரிப்பு பணியை மேற்கொள்ள மேற்பார்வை குழுவுக்கே முழு அதிகாரம் உள்ளது : சுப்ரீம் கோர்ட் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 8 ஏப்ரல் 2022      இந்தியா
Supreme-Court 2021 07 19

முல்லை பெரியாறு அணை பராமரிப்பு பணியை மேற்கொள்ள மேற்பார்வை குழுவுக்கே முழு அதிகாரம் உள்ளது என்று தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், மேற்பார்வை குழுவுக்கு மேலும் 2 உறுப்பினர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளது.

வாதம் நிறைவு...

முல்லைப்பெரியாறு அணை பராமரிப்பு பணியை மேற்பார்வை குழு மட்டுமே மேற்கொள்ள உத்தரவிட கோரிய மனு மற்றும் தமிழகம்-கேரளா இடையிலான முல்லை பெரியாறு அணையின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய உத்தரவிட கோரிய மனு ஆகியற்றை இணைத்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு  ரிட் மனுக்கள் மீதான வாதம் நிறைவு பெற்ற நிலையில் இந்த வழக்கில் நேற்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

பல வழக்குகள்...

தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இருந்து தலா ஒரு தொழில்நுட்ப நிபுணர்களை நீதிமன்றம் நியமித்தது. கேரள மாநிலத்தில் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டுள்ளது. ஆனால் அணையின் பராமரிப்பு தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இதனால் பல ஆண்டுகால பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு, தற்போது வரை நடைபெற்று வருகிறது. அதில் ஒரு வழக்கான முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பான ரிட் மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. 

மேலும் 2 உறுப்பினர்கள்...

இதில் நேற்று தீர்பளித்த நீதிபதிகள், முல்லைப் பெரியாறு மேற்பார்வை குழுவுக்கு மேலும் 2 உறுப்பினர்களை நியமித்தனர். முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான இயக்கம் மிகவும் முக்கியம். மேற்பார்வை குழுவின் உத்தரவுகள், பரிந்துரையை இரு மாநிலமும் கடைபிடிக்க வேண்டும். மேற்பார்வை குழுவுக்கு முழு ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுரை வழங்கினர்.

அனைத்து அதிகாரம்... 

கண்காணிப்பு மேற்பார்வை குழுவின் உத்தரவை கடைபிடிக்காமல் இருக்கும் பட்சத்தில் மாநில தலைமை செயலரே பொறுப்பு என தெரிவித்த நீதிபதிகள், அணை பாதுகாப்பு ஆணையம் செயல்பாட்டுக்கு வரும் வரை மேற்பார்வை குழுவுக்கு அணையில் அனைத்து அதிகாரம் உள்ளது என கூறினார். முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் மேற்பார்வை குழுவே அனைத்தையும் கவனிக்கும். மத்திய நீர்வள ஆணையத்தின் சார்பில் ஒரு தொழில்நுட்ப வல்லுநரும் இருப்பார் என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

பின்னர் விசாரிக்கலாம்...

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரத்துக்கு முதலில் தீர்வு காண்போம் புதிய அணை கோரிக்கை தொடர்பாக பின்னர் விசாரிக்கலாம் என்று நேற்று முன்தினம் நடைபெற்ற விசாரணையில் சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து