முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநிலங்களை பழிவாங்குவதாக நினைத்து மக்களை பழிவாங்குகிறது மத்திய அரசு : கண்ணூர் கம்யூ. மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சனிக்கிழமை, 9 ஏப்ரல் 2022      இந்தியா
Stelin 2022 03 05

Source: provided

கண்ணூர் : மாநிலங்களை பழிவாங்குவதாக நினைத்து மக்களை பழிவாங்குகிறது மத்திய அரசு என்று கண்ணூரில் நடந்த கம்யூனிஸ்ட் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். 

கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது மாநில மாநாடு கடந்த 6-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை கண்ணூரில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ள வேண்டும் என அக்கட்சியின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.  இதனை ஏற்று மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி விமானம் மூலம் சென்னையிலிருந்து  புறப்பட்டு கண்ணூர் சென்றார். அவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாரம் யெச்சூரி வரவேற்றார். 

அதனைத் தொடர்ந்து மாநாட்டில் மத்திய - மாநில உறவுகள் எனும் தலைப்பில் முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, 

வ.உ.சிதம்பரனார் சிறை வைக்கப்பட்ட கண்ணூர் மண்ணில் இந்த மாநாடு நடைபெறுகிறது. தமிழகத்திற்கும், கேரளத்திற்கும் இடையேயான உறவு என்பது சங்க காலம் முதல் உள்ளது. திராவிட மற்றும் கம்யூனிஸ்ட் உறவு என்பது 80 ஆண்டுகள் வரலாறு கொண்டது.  மாநில உரிமைகளை காப்பதில் சிங்கம் போல் செயல்படுகிறார் கேரள முதல்வர் பினராய் விஜயன்.  எனக்கு வழிகாட்டும் முதல்வராகவும் அவர் திகழ்கிறார். 

சிறந்த மாநில ஆட்சிக்கு எடுத்துக்காட்டாக திகழ்பவர் பினராய் விஜயன்.  மத்திய அரசை பற்றி கவலைப்படாமல் சிறப்பாக ஆட்சி நடத்துபவர். இந்தியாவை காப்பற்ற வேண்டும் எனில் முதலில் மாநிலங்கள் காப்ப்பாற்றப்பட வேண்டும்.  மாநிலங்களை பழிவாங்குவதாக நினைத்து மக்களை பழிவாங்குகிறது மத்திய அரசு. ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி என மாற்ற முயற்சிக்கிறார்கள். 

கவர்னர்கள் ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுகின்றனர். வேற்றுமைகள் அனைத்தையும் அழித்து ஒற்றைத்தன்மையை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.  ஆங்கிலேயர் ஆட்சியில் கூட ஒற்றை தன்மை அதிகாரங்கள் இல்லை.  மாநிலங்களில் கவர்னரை வைத்து ஆட்சி செய்ய நினைப்பது முறையல்ல.  மாநிலங்கள் அதிக அதிகாரங்கள் கொண்டதாக  இந்திய அரசியல் அமைப்பை மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, என் பெயர் ஸ்டாலின் என மலையாளத்தில் பேசிய தமிழக முதல்வரின் மலையாள பேச்சுக்கு அரங்கில் இருந்தவர்கள் பலத்த கரவொலி எழுப்பி வரவேற்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து