முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று குருத்தோலை ஞாயிறு அனுஷ்டிப்பு

சனிக்கிழமை, 9 ஏப்ரல் 2022      தமிழகம்
Christian-Church 2022 04 09

Source: provided

சென்னை : தமிழத்தில் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெறுகிறது.

சகேரியா தீர்க்க தரிசனம் நிறைவேறும் வகையில் சமாதானத்தின் தேவனாக இயேசு கிறிஸ்து ஜெருசலேம் நகரில் கோவேறு கழுதையின் மேல் பவனியாக சென்றார். யூதர்களின் ராஜாவாகிய இயேசு பவனியாக செல்லும்போது ஜெருசலேம் மக்கள் அவரை தாவிதின் குமாரனுக்கு ஓசன்னா, என வழி நெடுக வரவேற்றனர். அப்போது குருத்தோலைகளை மக்கள் பிடித்து இயேசுவை வரவேற்றதாக வேதாகமம் வெளிப்படுத்துகிறது.

இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) குருத்தோலை ஞாயிறு பவனி நடக்கிறது. கிறிஸ்தவர்கள் குருத் தோலையை பிடித்தவாறு ஆலயத்தை சுற்றி வருவதோடு, ஆலயம் அமைந்துள்ள பகுதிகளில் ஊர்வலமாக செல்வதும் வழக்கம்.

கொரோனா தொற்று பாதிப்பால் கடந்த ஆண்டு குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெறவில்லை. இந்த வருடம் தொற்று முற்றிலும் குறைந்து கட்டுக்குள் இருப்பதால் இந்த நிகழ்ச்சியை கிறிஸ்தவர்கள் சிறப்பாக அனுசரிக்கிறார்கள். கத்தோலிக்க திருச்சபை மற்றும் சி.எஸ்.ஐ. திருச்சபைகளில் குருத்தோலை ஞாயிறு பவனி வெகு சிறப்பாக நடைபெறும். காலை 6 மணிக்கே தேவாலயத்தை சுற்றி கிறிஸ்தவர்கள் பாடல் பாடி பவனியாக குடும்பம் குடும்பமாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்.

இதே போல தென்னிந்திய திருச்சபை சென்னை பேராயர் ஜார்ஜ் ஸ்டீபன் தலைமையின் கீழ் அனைத்து சி.எஸ்.ஐ. ஆலயங்களில் பவனி மற்றும் சிறப்பு வழிபாடு நடக்கிறது. கதீட்ரல் பேராலயம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், பெரம்பூர், பாரிமுனை, சூளை, பிராட்வே, வேப்பேரி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள ஆலயங்களில் குருத்தோலை பவனியும் அதனை தொடர்ந்து சிறப்பு ஆராதனையும் நடக்கிறது.

குருத்தோலை ஞாயிறையொட்டி ஆலயங்கள் குருத்தோலைகளால் அலங்கரிக்கப்படுகிறது. குருத்தோலையால் தயாரிக்கப்பட்ட சிலுவைகளை சபை மக்களுக்கு ஆயர்கள் வழங்கி அருள் ஆசியும் கூறுவார்கள். குருத்தோலை ஞாயிறை தொடர்ந்து அடுத்த வாரம் முழுவதும் பெரிய வாரமாக அதாவது கஷ்ட நாட்களாக கிறிஸ்தவர்கள் அனுசரிக்கிறார்கள். திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை சிறப்பு கன்வென்‌ஷன் கூட்டங்கள் ஆலயங்களில் நடைபெறும்.

இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய இந்த நாட்களை கிறிஸ்தவர்கள் மிகவும் கஷ்ட தினங்களாக கருதி ஆலய வழிபாடுகளில் பயபக்தியோடு பங்கு பெறுவார்கள். 11, 12, 13 ஆகிய மூன்று நாட்களும் இயேசுவின் சிலுவை மரணம், பாடுகள் குறிந்து சிறப்பு வழிபாடுகள் அனைத்து ஆலயங்களிலும் நடைபெறும்.

14-ந் தேதி பெரிய வியாழன் அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் இயேசு தனது சீடர்களுடன் போஜனம் பண்ணுவார். சீடரின் கால்களை கழுவுவார், இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் கத்தோலிக்க திருச்சபைகளில் பாதிரியார்கள் சாதாரண மனிதரின் காலை கழுவும் நிகழ்ச்சி நடைபெறும். அதைத் தொடர்ந்து 15-ந் தேதி புனித வெள்ளி எனப்படும் பெரிய வெள்ளிக்கிழமையாகும். அன்று இயேசுவை சிலுவையில் அறைந்து கொல்லப்படும் நிகழ்வை சித்தரிக்கும் வகையில் மும்மணி தியான ஆராதனை ஆலயங்களில் நடைபெறும். அதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இயேசு உயிர்த்தெழுதல் பண்டிகை ஈஸ்டர் கொண்டாடப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து