முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகிலேயே சமையல் எரிவாயு விலையில் இந்தியா முதலிடம்

சனிக்கிழமை, 9 ஏப்ரல் 2022      இந்தியா
Cylinder- 2022 01 01

Source: provided

புதுடெல்லி : உலகிலேயே சமையல் எரிவாயு விலையில் இந்தியாதான் முதலிடத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டில் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருள்களின் விலை உயர்ந்து வருகிறது. இந்நிலையில் உள்நாட்டுச் சந்தையில் நாணயம் வாங்கும் திறன் அடிப்படையில் ஒரு லிட்டர் சமையல் எரிவாயு (எல்.பி.ஜி.) விலையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. மேலும் இந்தியா, பெட்ரோல் விலையில் மூன்றாவது இடத்திலும், டீசல் விலையில் எட்டாவது இடத்திலும் இருக்கிறது. 

ஒவ்வொரு நாட்டிலும் தனி நபர் வருமானம் வேறுபடுகிறது. மேற்கத்திய நாடுகளில் ஒரு லிட்டர் பெட்ரோல், சராசரி மக்களின் தினசரி வருமானத்தில் ஒரு சிறு பகுதியே ஆகும். இந்தியாவில் சராசரி மக்களின் தினசரி வருமானத்தின் நான்கில் ஒரு பங்காக உள்ளது. இதுவே கிழக்கு ஆப்பிரிக்க நாடான புருண்டியில் மக்களின் தினசரி வருமானத்தைவிட அதிகமாக உள்ளது.

பன்னாட்டு நாணய நிதியம் (ஐ.எம்.எப்.)கணக்கீட்டின்படி, இந்தியாவின் ஒரு லிட்டர் பெட்ரோல் விலையை சர்வதேச டாலர் மதிப்பிற்கு மாற்றினால் 5.2 ஆக உள்ளது. இதனடிப்படையில், சூடான்(8 டாலர்), லாவோஸ்(5.6 டாலர்) ஆகிய நாடுகளைத் தொடர்ந்து இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. இதுபோல சமையல் எரிவாயு விலையில் இந்தியா முதலிடத்தில்(3.5 டாலர்) உள்ளது. துருக்கி, பிஜி, மால்டோவா, உக்ரைன் ஆகிய நாடுகள் முறையே அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. அதுபோல டீசல் விலையில் இந்தியா 8 ஆவது இடத்தில்(4.6 டாலர்) உள்ளது. 

சென்னையில் நேற்று நிலவரப்படி வீட்டிற்கு பயன்படுத்தக்கூடிய சமையல் எரிவாயு உருளை (14.2 கிலோ)யின் விலை ரூ. 965.5, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 110.94; டீசல் விலை ரூ. 101.04 ஆகவும் இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து