முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வளமான தேசத்திற்கு வலுப்பெற்ற விவசாயிகளே முக்கியம்: பிரதமர் மோடி

ஞாயிற்றுக்கிழமை, 10 ஏப்ரல் 2022      இந்தியா
Modi 2022 10

Source: provided

புதுடெல்லி : வளமான தேசத்திற்கு வலுப்பெற்ற விவசாயிகளே முக்கியம்  என்று பைசாகி விழாவையொட்டி பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

பஞ்சாபில் புத்தாண்டு மற்றும் அறுவடைத் திருநாளான பைசாகி விழா வரும் 14-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதையொட்டி முன்கூட்டியே அமிர்தசரசில் கோதுமை விளைந்துள்ள வயலில் சீக்கியர்கள் ஆடிப்பாடிக் கொண்டாடிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. இந்த நிலையில் அறுவடை காலம் மற்றும் பைசாகி பண்டிகைக்கு முன்னதாக, விவசாயிகளுக்கு அதிகாரம் அளித்த மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் பலன்கள் பற்றிய விவரங்களை பிரதமர் மோடி டுவிட்டரில்  பகிர்ந்து கொண்டுள்ளார். வளமான தேசத்திற்கு வலுப்பெற்ற விவசாயிகளே முக்கியம் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

பஞ்சாபில் பைசாகி, மராட்டியத்தில் குடி பத்வா, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் உகாதி,  ஜம்மு காஷ்மீரில் நவ்ரே, மேற்கு வங்காளத்தில் பொய்லா போயிசாக், அசாமில் போஹாக் பிஹு மற்றும் கேரளாவில் விஷு என பல்வேறு பெயர்களில் அறுவடைக் காலம் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:-

நமது விவசாய சகோதர சகோதரிகளால் நாடு பெருமை கொள்கிறது. நாட்டில் உள்ள விவசாயிகள் மேலும் வலுப்பெற்றால் புதிய இந்தியா மேலும் வளம் பெறும்.  பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி மற்றும் விவசாயம் தொடர்பான பிற திட்டங்கள் நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு புதிய பலத்தை அளித்து வருவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று  தெரிவித்து சில படங்களையும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து