முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைவருக்கும் வாழ்வில் மகிழ்ச்சி கிடைக்கட்டும் : ஜனாதிபதி, பிரதமர் மோடி ராம நவமி வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 10 ஏப்ரல் 2022      இந்தியா
Rannath-Modi 2021 12 08

Source: provided

புது டெல்லி : ராம நவமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 

ராமபிரான் அவதரித்த தினமான ராமநவமி நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி  நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது,  நாட்டு மக்களுக்கு ராம நவமி நல்வாழ்த்துக்கள். அனைவருக்கும் இறைவன் ஸ்ரீ ராமரின் அருளால் வாழ்வில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் வளம் கிடைக்கட்டும். ஜெய் ஸ்ரீ ராம் என்று அவர் தெரிவித்துள்ளார்.  தொடர்ந்து, குஜராத் மாநிலம் ஜூனாகத், கதிலாவில் உள்ள உமியா மாதா கோவிலின் 14-வது நிறுவன தின விழாவின் ஒரு பகுதியாக நேற்று நடந்த ராமநவமி விழாவில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி கலந்து கொண்டார். 

ராம நவமியையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நாட்டு மக்களுக்கு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ராம நவமி புனித நாளில், சக மக்கள் அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.  ராம நவமி என்பது ராமரின் கொள்கைகளை நினைவுகூரவும், அவற்றை நம் வாழ்வில் பயன்படுத்தவும் ஒரு நல்ல சந்தர்ப்பம் ஆகும்.  நல்லொழுக்கம், சகிப்புத்தன்மை, இரக்கம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய உயர்ந்த விழுமியங்களைப் பின்பற்ற அவரது வாழ்க்கை நம்மைத் தூண்டுகிறது. ராமர் காட்டிய வழியைப் பின்பற்றி,  சிறந்த தேசத்தைக் கட்டமைக்க உறுதி ஏற்போம்.  மேலும், ராம நவமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு  துணை ஜனாதிபதி உள்ளிட்ட பல  தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து