முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பகுஜன் சமாஜ் குறித்து ராகுல கருத்து: மாயாவதி கண்டனம்

ஞாயிற்றுக்கிழமை, 10 ஏப்ரல் 2022      இந்தியா
Mayawati 2022 04 10

Source: provided

லக்னோ : பகுஜன் சமாஜ் குறித்து கருத்து தெரிவிக்கும் முன்னர், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 100 முறை சிந்திக்க வேண்டும் என்றும் உலகம் முழுவதும் வேடிக்கை பார்க்கும் கட்சி நாங்கள் அல்ல என்றும் மாயாவதி கூறியுள்ளார். புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ராகுல் காந்தி, எங்களுடன் கூட்டணி அமையுங்கள். 

முதல்வராக்குகிறோம் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதிக்கு அழைப்பு விடுத்தோம். ஆனால், அவர் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூட முன்வரவில்லை எனக் கூறியிருந்தார். இது தொடர்பாக மாயாவதி கூறியதாவது: 

ராகுலின் கருத்துகள், தலித்கள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி குறித்து அவரின் தாழ்வு மனப்பான்மையையே காட்டுகிறது. சொந்த பாதையை நிர்ணயிக்க முடியாமல், சொந்த கட்டமைப்பை உருவாக்க முடியாத காங்கிரஸ், அடுத்தவர்களின் விஷயத்தில் தலையிடுகிறது.  பகுஜன் சமாஜ் குறித்து கருத்து தெரிவிப்பதற்கு முன்னர், ராகுலும், காங்கிரசும் 100 முறை சிந்திக்க வேண்டும். பா.ஜ.க.வும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பும்,

காங்கிரஸ் இல்லாத இந்தியாவாக மட்டும் இல்லாமல், எதிர்க்கட்சிகளே இல்லாத தேசமாக மாற்றி, கிராமம் முதல் தேசிய அளவில் வரை, சீன அரசியலமைப்பு போல் ஒரே கட்சி ஆட்சி முறையை கொண்டு வர முயற்சிக்கின்றனர்.

பார்லிமென்டில் வலுக்கட்டாயமாக பிரதமரை ராகுல் கட்டியணைத்தது போன்ற கட்சி நாங்கள் அல்ல. உலகம் முழுவதும் வேடிக்கை பார்க்கும் கட்சி நாங்கள் அல்ல. இவ்வாறு மாயாவதி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து