முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சினிமா என்பது ஒரு எஜுகேஷன் - சி.மகேந்திரன்

திங்கட்கிழமை, 11 ஏப்ரல் 2022      சினிமா
Mahendran 2022 04 11

Source: provided

புதுமுகங்கள் நடிப்பில் உருவான ‘வாய்தா’ படத்தின் இசையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சி மகேந்திரன் வெளியிட்டார். வராஹ ஸ்வாமி ஃபிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. வினோத்குமார் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘வாய்தா’. இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் ஓம் பிலிம்ஸ் வெளியிடுகிறது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சி. மகேந்திரனின் மகன் புகழ் மகேந்திரன் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக பவுலின் ஜெசிகா நடித்திருக்கிறார். இவர்களுடன் பேராசிரியர் மு. ராமசாமி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ஆர். ஜே. சேது முருகவேல் அங்காரகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு சி. லோகேஸ்வரன் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய சி மகேந்திரன்,  தமிழ் சினிமா மட்டுமல்ல அரசியல், வாழ்க்கை, இலக்கியம்.. இவை அனைத்தும் நேர்மையில் இருந்து விலகி செல்லும் போது, அதற்குரிய விலையை அது கொடுத்துவிட்டு தான் செல்லும். சினிமா என்பது ஒரு எஜுகேஷன். இப்போதைய தமிழ் சினிமாவில் பல கூறுகள் இருக்கலாம். ஆனால் நான் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். திரைத்துறையில் நேர்மையாக செயல்பட வேண்டும் என்ற அடிப்படையை உடையவர்களால் தான் மாற்றத்தை உண்டாக்க முடியும் என்றார். மேலும், படத்தின் உள்ளடக்கத்திற்காக முதலீடு செய்து தன்னை இணைத்துக்கொண்ட பட தயாரிப்பாளர் வினோத் குமார் அவர்களை மனதாரப் பாராட்டுகிறேன். என்றார். விழாவின் இறுதியில் ‘வாய்தா’ படத்தின் இசை வெளியிடப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து