முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கெடுக்கும் தயாரிப்பாளர்கள் ஆர்.வி.உதயகுமார்

திங்கட்கிழமை, 11 ஏப்ரல் 2022      சினிமா
RV-Udayakumar 2022 04 11

Source: provided

சூர்யா பிலிம் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பாக  திரு.மகேஷ்வரன் நந்தகோபால் தயாரிப்பில்  தமிழ் மற்றும் மலையாளத்தில் கிரைம்  திரில்லராக  உருவாகியிருக்கும்  படம் 'சிட்தி.  இந்த படத்தை பயஸ் ராஜ்  எழுதி இயக்கியுள்ளார். அஜி ஜான் கதாநாயகனாக நடித்துள்ளார். அக்ஷ்யா உதயகுமார் மற்றும் ஹரிதா கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். சட்டக் கல்லூரியில் படிக்கும் சிட்தி என்ற மாணவன் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் கொலையாளியாக மாறுகிறார். அவர் ஏன் கொலையாளியாக மாறினார் என்பதை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லியுள்ளார்கள். அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு,  இப்படம் விரைவில் திரையரங்குகளில்  வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தமிழ் பதிப்பின் இசை வெளியீட்டு விழா, சமீபத்தில் நடைபெற்றது. இவ்விழாவினில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் ஆர் வி. உயகுமார், சிவாஜி சார், உடல்நிலை சரியில்லாத நேரத்தில் அவரிடம் ஒரு கதையை கூறினேன். நான் அதிகமாக நடித்துவிட்டேன், நான் மாற்றி நடிக்க வேண்டும் என்றார். சாகும் தருவாயிலும் கூட நடிப்பில் கற்றுக்கொள்ள வேண்டும் என நினைத்த ஒப்பற்ற கலைஞன் அவர். இப்பொழுது சினிமாவை பிசினஸ் ஆக்கி விட்டீர்கள். சினிமா மீது ஆர்வம் கொண்டவர்களை இயக்குனராக்காமல், பணம் கேட்பவருக்கு கொடுத்து கெடுக்கிறார்கள் தயாரிப்பாளர்கள் என்றார். இப்பொழுது தான் பான் இந்தியா என்ற வார்த்தை உள்ளது. ஆனால் முன்னரே அப்படி தான் எடுக்க பட்டது. அதை மாற்றியவர்கள், வியாபாரிகள் என்றார். மேலும்,  சமீபத்தில் நான் பார்த்த டிரெய்லர்களில் என்னை விஷுவலாக அசத்தியது இந்தப்படம் தான் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து