முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரிஜினல் வீரர்கள் களமிறங்கும் போலாமா ஊர் கோலம்

திங்கட்கிழமை, 11 ஏப்ரல் 2022      சினிமா
Prabhujit 2022 04 11

Source: provided

கால்பந்தாட்ட வீரர்கள் 20 பேர் இணைந்து நடித்து யதார்த்த படமாக உருவாகியுள்ளது போலாமா ஊர் கோலம் படம். கஜசிம்ஹா மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை நாகராஜ் பாய் துரைலிங்கம் இயக்கியுள்ளார். இதில்  கதாநாயகனாக பிரபுஜித் நடிக்க,  பள்ளி மற்றும் கல்லூரி நண்பர்கள் உதவியில் கிரவுட் பண்டிங்கில் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் நாயகியாக சக்தி நடித்துள்ளார். மேலும், மதுசூதன்,ரவி ஏழுமலை, துளசி, சிவகார்த்திக், சூர்யா, கிருஷ்ணா, ரபிக்,ஆதீ இராசன் போன்றோரும் நடித்துள்ளனர். இது வட சென்னையில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி உள்ளது. ஒரு மூத்த கால்பந்தாட்ட வீரர் தனது காதலியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக ஒரு பயணம் மேற்கொள்கிறார். அந்தப் பயண நிகழ்வுகளே இப்படத்தின் கதை என்கிறார் இயக்குனர் நாகராஜ் பாய் துரைலிங்கம். இதன் படப்பிடிப்பு 80%ஆந்திராவிலும், 20% தமிழ்நாட்டிலும் நடைபெற்றுள்ளது. வைஷாலி சுப்பிரமணியம் மற்றும் டேவிட்பாஸ்கர் இருவரும் இணைந்து ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளனர். எடிட்டிங் தீபக். சண்டைக்காட்சிகளை குன்றத்தூர் பாபு அமைத்துள்ளார். உலகிலேயே 20 veteran கால்பந்தாட்ட வீரர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள முதல் படம்  என்ற பெருமையை இப்படம் பெறுவதாக கூறுகிறார் படத்தின் இயக்குநர் .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து