முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சண்டை தீர்வாகாது பேசி தீர்க்க வேண்டும் - பாரதிராஜா

திங்கட்கிழமை, 11 ஏப்ரல் 2022      சினிமா
Bharathiraja 2022 04 11

Source: provided

ஸ்ரீ மகானந்தா சினிமஸ் நிறுவனம் சார்பில் ஆர்.முருகேசன் தயாரிப்பில் எஸ்.தங்கராஜ் இயக்கியிருக்கும் படம் கம்பெனி. இப்படத்தில் பாண்டி, முருகேசன், திரேஷ் குமார், பிரித்வி, வலினா, காயத்ரி, வெங்கடேஷ், ரமா, சஞ்ஜீவ் பாஸ்கரன், சேலம் ஆர்.ஆர். தமிழ்செல்வன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில், இயக்குநர் பாரதிராஜா, எஸ்.தாணு, உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டார்கள். குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய இயக்குனர் பாரதிராஜா, இதே வடபழனியில் தெரு தெருவாக சாப்பாடில்லாமல் அலைந்தவன் தான் இந்த பாரதிராஜா. இங்கு பேசிய தயாரிப்பாளர் கே.ராஜான், பல பிரச்சனைகளை கூறினார். இதுவெல்லாம் ஒரு நாளில் கடந்து போகும், ஆனால் இதற்காக நாம் சண்டை போட கூடாது. எல்லாருமே நம் சகோதர்கள் தான், எனவே எதையும் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பது என் எண்ணம் என்றார். இந்த இடத்தில் ஒரு ஹீரோவை அப்பாவும், அம்மாவும் நிறுத்தியிருக்கிறார்கள். இது மிகப்பெரிய விஷயம். நிலம் நீர் காற்று இந்த மூன்றும் நம்மை வாழ வைக்கிறது. இவற்றுக்கு பிறகு அப்பா, அம்மா தான் நம்மை வாழ வைக்கிறார்கள். எனவே அவர்களை மறக்க கூடாது. படம் பெயர் கம்பெனி, கிழக்கிந்திய கம்பெனி போல மிகப்பெரிய கம்பெனியாக படம் வெற்றி பெறும் என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து