முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கள்ளழகர் மீது விசைப்பம்புகள் மூலம் தண்ணீர் பீய்ச்சக்கூடாது : பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் அறிவுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 12 ஏப்ரல் 2022      ஆன்மிகம்
kallalager 2022 04 12

Source: provided

மதுரை : சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியின்போது பக்தர்கள் தோல்பையில் அதிக விசையுள்ள பிரஷர் பம்புகள் மற்றும் தண்ணீரில் வேதிப் பொருள்களை கலந்து பீய்ச்சக்கூடாது என்று கோவில் நிர்வாகம் வலியு றுத்தியுள்ளது. 

இதுகுறித்து கள்ளழகர் கோவில் துணை ஆணையர் அனிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கள்ளழகர் கோவில் சித்திரைத் திருவிழா  கடந்த 2-ம் தேதி (செவ்வாய்க்கிழமை)  தொடங்கி வருகிற 21-ம்  தேதி வரை நடைபெறுகிறது. இதில் வருகிற 16-ம் தேதி கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் போது , தீர்த்தவாரி நிகழ்ச்சி, திவான் ராமராயர் மண்டபத்தில் நடைபெற உள்ளது.  இந்த நிகழ்ச்சியில், பக் தர்கள் விரதமிருந்து தோல் பையில் தண்ணீர் சுமந்து வந்து சிறிய குழாய் மூலம் சுவாமியின் மீது பீய்ச்சி தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம். 

பக்தர்களின் விரத வலிமைக்கு ஏற்ப அவரவர் தோல்பையில் இருந்து தண்ணீர் வெளியேறி சுவாமி மீது பட்டு அபிஷேகமாகும் என்பது ஐதீகம். ஆனால் கடந்த சில ஆண் டுகளாக பக்தர்கள் ஐதீகத்தை மீறி தோல் பையில் அதிக விசையுள்ள பிரஷர் பம்புகளை பொருத்தி தண்ணீரில் திரவியங்கள் மற்றும் வேதிப்பொருள்களை கலந்து பீய்ச்சுவதால் கள்ளழகர் சுவாமி, குதிரை வாகனம் மற்றும் ஆபரணங்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது.  

மேலும் திரவியம் கலந்த தண்ணீரால் பட்டர்கள், பிரசாரகர் பணியாளர்கள் மற்றும் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த ஆண்டு நடைபெறும் சித்திரை திருவிழாவில் தண்ணீர் பீய்ச்சும் பக்தர்கள் அதிக விசையுள்ள பிரஷர் பம்புகள் மூலம் பீய்ச்சாமல் வழக்க மான தோல்பையில் சிறிய குழாய் மூலம், எவ்வித வேதிப் பொருள்களும் கலக்காத சுத்தமான தண்ணீரை மட்டுமே பீய்ச்ச வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து