முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீஸ்ட் - விமர்சனம்பீஸ்ட் - விமர்சனம்

புதன்கிழமை, 13 ஏப்ரல் 2022      சினிமா
beast

மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் நடிக்கும் பிரம்மாண்ட படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க பூஜா ஹெக்தே, செல்வராகவன் என முக்கிய நட்சத்திரங்கள் பலர் நடித்திருந்தனர். கதை, இந்திய ராணுவத்தின் உளவாளியாக இருக்கும் விஜய் மற்றொரு நாட்டில் தீவிரவாதியை சுடும் போது தவறுதலாக ஒரு குழந்தை இறந்து விடுகிறது. அதனால் தனது வேலையை விட்டுவிட்டு தமிழ்நாட்டில் இருக்கிறார். எதிர்பாராதவிதமாக ஒரு வணிக வளாகத்தை தீவிரவாதிகள் ஹைஜாக் செய்ய அதனுள் மாட்டிக்கொள்ளும் விஜய், பின்பு அங்கிருந்து மக்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே பீஸ்ட் படத்தின் கதை. பீஸ்ட் முதல் பாதி, இரண்டாம் பாதி என மொத்த படத்தையும் விஜய் தன் தோளில் சுமக்கிறார். அவரது ஸ்கிரீன் பிரசன்ஸ் சாதாரண காட்சியை கூட வேற லெவல் காட்சியாக மாற்றுகிறது. இவருக்கு ஜோடியாக நடித்துள்ள பூஜா ஹெக்தே ஒவ்வொரு காட்சியிலும் ரசிக்க வைக்கிறார்.  இதைத்தாண்டி படத்தில் சொல்லும் அளவிற்கு பெரிதாக ஒன்றுமே இல்லை. விஜையின் இன்ட்ரோ சீனிலேயே ஸ்க்ரீன் முன் ஆடிக்கொண்டு இருந்த ரசிகர்கள் அமைதியாக சீட்டில் உட்கார்ந்து விட்டனர், அப்படி ஒரு சாதாரண இன்ட்ரோவாக விஜைய்க்கு இருந்தது. ஹீரோயின் இன்ட்ரோ  பாடல், சிரிப்பே வராத காமெடி என முதல் பாதி மெதுவாக செல்கிறது. இரண்டாம் பாதி இதைவிட மெதுவாக செல்கிறது.  நெல்சனின் முந்தைய படமான டாக்டரின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது காமெடிதான். ஆனால் பீஸ்ட் படத்தில் அவ்வளவு காமெடியன்கள் இருந்தும் சுத்தமாக எடுபடவில்லை.  படம் முழுக்க வரும் செல்வராகவன் விஜய்க்கு பில்டப் மட்டுமே கொடுத்துள்ளார்.  சுவாரசியமே இல்லாத ஒவ்வொரு காட்சியையும் பார்க்க வைப்பது அனிருத்தின் பிஜிஎம் தான். அவர் ஒவ்வொரு சீனிற்கும் கடுமையாக உழைத்துள்ளார். மிகப்பெரிய ஹிட்டடித்த அரபி குத்து பாடல் தேவையே இல்லாத இடத்தில் வருகிறதே என நினைத்தால் ஜாலியோ ஜிம்கானா பாடல் படம் முடிந்த பின்பு வருகிறது.  விஜய்யின் ஆக்சன் காட்சிகள் சிறப்பாக இருந்தாலும் ஏதோ ஒன்று மிஸ் ஆனா பீலிங்கே ஆடியன்சுக்கு வருகிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து