முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இயக்குநர் ராம் நிவின்பாலி படப்பிடிப்பு நிறைவு

திங்கட்கிழமை, 18 ஏப்ரல் 2022      சினிமா
Ram-Nivinpalli 2022 04 18

Source: provided

சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தை இயக்குநர் ராம் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நாயகனாக நிவின்பாலி நாயகியாக அஞ்சலி நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப்படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தனுஷ்கோடியில் துவங்கி அதன்பிறகு கேரளாவில் வண்டிப்பெரியார், வாகமன் ஆகிய இடங்களிலும் நடைபெற்று முடிந்திருந்தது. இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக சென்னை அருகே கும்மிடிப்பூண்டியில் உள்ள ஏஆர்ஆர் ஃபிலிம் சிட்டியில் ரயில் செட் ஒன்று வடிவமைக்கப்பட்டு, அதில் நிவின்பாலி, சூரி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் இந்தப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவுற்றதாக படக்குழு தற்போது அறிவித்துள்ளது. இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து