முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலையரசன்-மிர்னா இணையும் புர்கா

திங்கட்கிழமை, 18 ஏப்ரல் 2022      சினிமா
Kalaiyarasan-Mirna 2022 04

Source: provided

SKLS கேலக்ஸி மால் புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் ஸ்டோரிஸ் தயாரித்துள்ள புர்கா என்கின்ற படத்தை சர்ஜுன் கே.எம் இயக்கியுள்ளார்.  இந்த படத்தில் நாயனாக கலையரசன் மற்றும் நாயகியாக மிர்னாவும் இணைந்து நடித்துள்ளனர். படத்துக்கு ஒளிப்பதிவு ஜி பாலமுருகன், இசை ஆர் சிவாத்மிகா, எடிட்டிங் பி பிரவின் பாஸ்கர், ஆடை வடிவமைப்பு மீனாட்சி ஸ்ரீதரன். கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பரில் இப்படத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்தது.  இதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்பட விழாக்களின் சுற்றுகளில் கலந்துகொண்டது. இந்நிலையில் இப்போது நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் (NYIFF) மூன்று பிரிவுகளில் இப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், வ்யூஃபைண்டர் ஃபிலிம் புரொடக்ஷன்ஸின் திலானி ஆர், திரைப்பட விழாக்கள் மற்றும் விருதுகளில் இப்படம் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து