முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.35 கோடியில் 307 படுக்கை, வைபை வசதிகளுடன் மதுரை மீனாட்சி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்காக நவீன தங்கும் விடுதி: சட்டசபையில் அமைச்சர் சேகர்பாபு தகவல்

திங்கட்கிழமை, 18 ஏப்ரல் 2022      ஆன்மிகம்
Sekar-Babu-2021-09-29

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு 35 கோடி ரூபாய் செலவில் நவீன தங்கும் விடுதி கட்டித்தரப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு நவீன தங்கும் விடுதி கட்ட அரசு முன்வருமா? என சட்டமன்ற உறுப்பினர் தளபதி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கடந்த ஆண்டு நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டு, 1.33 ஏக்கர் பரப்பளவில் 57 அறைகளில் 307 படுக்கை வசதிகளுடன் 35 கோடி ரூபாய் செலவில் தங்கும் விடுதி கட்ட திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்ட ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு உள்ளதாக கூறினார். மேலும், இந்த ஆண்டே தங்கும் விடுதி கட்டித் தரப்படும் என கூறிய அவர், 307 படுக்கை வசதிகளுடன், வைபை வசதி உள்ளிட்ட நவீன வசதிகளுடன் தங்கும் விடுதி அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து