முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை ரூ. 168 குறைந்து : சவரன் ரூ. 40,232-க்கு விற்பனை

செவ்வாய்க்கிழமை, 19 ஏப்ரல் 2022      வர்த்தகம்
Gold 2021 11 23

Source: provided

சென்னை : சென்னையில் நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்து ஒரு சவரன் ரூ.40,232-க்கு விற்பனையானது. 

தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக உயர்ந்து வந்த நிலையில் நேற்று திடீரென்று குறைந்தது. கடந்த வாரம் 12-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) தங்கம் ஒரு பவுன் ரூ. 39,576-க்கு விற்கப்பட்டது. அது மறுநாள் ரூ. 39,968 ஆக உயர்ந்தது.

கடந்த 14-ம் தேதி தங்கம் விலை 40 ஆயிரத்தை கடந்தது. தமிழ்ப்புத்தாண்டு அன்று ஒரு பவுன் தங்கம் ரூ. 40,096-க்கு விற்பனையானது. கடந்த 16-ம் தேதி அது ரூ. 40,112 ஆக உயர்ந்தது. கடந்த ஞாயிறன்று அதே நிலையில் நீடித்தது. நேற்று முன்தினம் அது ரூ. 40,400 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில் தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ. 168 குறைந்துள்ளது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ. 40,232-க்கு விற்கப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ. 5050-க்கு விற்கப்பட்டது.

நேற்று கிராமுக்கு ரூ. 21 குறைந்து ரூ. 5029 ஆக விற்கப்பட்டது. இதே போல் வெள்ளி விலையும் நேற்று குறைந்து இருந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் வெள்ளி ரூ. 75-க்கு விற்கப்பட்டது. நேற்று கிராமுக்கு 10 காசு குறைந்து ரூ. 74.90-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ. 74,900-க்கு விற்கப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து