முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல் கிரிக்கெட் 33-வது லீக்: ராயுடு, டோனி அபார ஆட்டத்தால் மும்பையை வீழ்த்தியது சென்னை

வெள்ளிக்கிழமை, 22 ஏப்ரல் 2022      விளையாட்டு
Rayudu-Tony 2022 04 22

ஐ.பி.எல் கிரிக்கெட் 33-வது லீக் போட்டியில் ராயுடு, டோனி அபார பேட்டிங்கால் மும்பையை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றிப் பெற்றது.

சென்னை பந்துவீச்சு...

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 33-வது ஆட்டம் மும்பை டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. திலக் வர்மா 51 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார். சூர்யகுமார் யாதவ் 32 ரன், ஹிருத்திக் ஷாகீன் 25 ரன்னில் ஆட்டமிழந்தனர்.

156 ரன்கள் இலக்கு...

சென்னை அணி சார்பில் முகேஷ் சவுத்ரி 3 விக்கெட்டும், பிராவோ 2 விக்கெட்டும் எடுத்தனர். இதையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. முதல் பந்தில் ருத்ராஜ் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து இறங்கிய சாண்ட்னர் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய உத்தப்பா 30 ரன்னிலும், ஷிவம் டுபே 13 ரன்னிலும் வெளியேறினர். பொறுப்புடன் ஆடிய அம்பதி ராயுடு 40 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அபார வெற்றி... 

கடைசி 5 ஓவரில் 53 ரன்கள் தேவைப்பட்டது. ஜடேஜா 3 ரன்னில் அவுட்டானார். டோனியுடன், பிரெடோரியஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் கடைசி வரை போராடினர். பிரெடோரியஸ் 22 ரன்னில் அவுட்டானார். இறுதியில், சென்னை அணி 156 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. டோனி 13 பந்தில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை அணி சார்பில் டேனியல் சாம்ஸ் 4 விக்கெட்டு, உனத்கட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பாராட்டு மழையில் டோனி

மும்பை வான்கடே மைதானத்தில் 2011 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஹெலிகாப்டர் ஷாட்டுன் இந்தியாவுக்கு வெற்றி தந்த டோனியின் ஸ்டைலிஷான ஃபினிஷிங்கை இன்றும் ரசிகர்கள் கொண்டாடுவார்கள். அவ்வளவு எளிதில் மறக்க கூடிய வெற்றியா அது என்பது போல இருக்கும். தற்போது அதே மும்பையில், மும்பை அணிக்கு எதிராக சுமார் 11 ஆண்டுகளுக்குப் பின் 40 வயதிலும் தானே பெஸ்ட் ஃபினிஷர் என நிரூபித்திருக்கிறார் தல டோனி.

ஆட்டத்தை பார்த்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர், ட்விட்டரில் டோனிக்கு வாழ்த்து மழை பொழிந்து இருக்கின்றனர். எம்.எஸ் டோனி. ஓம் ஃபினிஷாயா நமஹ. ரொம்ப நல்லா இருக்கு என ட்விட்டரில் தனது வாழ்த்தை தெறிக்கவிட்டிருக்கிறார் சேவாக். எம்எஸ்டி எப்போதும் சிறந்த ஃபினிஷர் என ஆகாஷ் சோப்ராவும், இப்போது முதல் மஞ்சள் ஆடையின் வெற்றி பவனியை காண முடியும் என ஸ்ரீகாந்தும் பதிவு செய்துள்ளனர். டோனியின் கைவண்ணத்தில் மிகப் பெரிய வெற்றி என விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, வெங்கடபிரசாத், ரஷீத் கான் ஆகியோரும் டோனியை வெகுவாக பாராட்டியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து