முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 போட்டிகளில் அதிக ரன்கள்: டோனியின் சாதனையில் மேலும் ஒரு 'மைல்கல்' : மோசமான சாதனை படைத்த ரோகித்

வெள்ளிக்கிழமை, 22 ஏப்ரல் 2022      விளையாட்டு
Rohit-Sharma-2022-04-14

இருபது ஓவர் போட்டிகளில் உலகத்திலேயே அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை டோனி படைத்துள்ளார்.

ஸ்ட்ரைக் ரேட்... 

டோனி 20-வது ஓவர்களில் மட்டும் இதுவரை 121 பந்துகளை எதிர்கொண்டு 323 ரன்களை விளாசியுள்ளார். இதில் 26 பவுண்டரிகளும், 26 சிக்சர்களும் அடங்கும். இதில் ஸ்ட்ரைக் ரேட் 266.94 ஆகும். இப்படி ஒரு சாதனையை அதிரடி பேட்ஸ்மேன்களான டிவில்லியர்ஸ், கெயில் கூட படைத்தது இல்லை.

16 ஓவர்கள்...

டோனியின் ஆட்டத்தை பார்க்கும்போது 2010ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிதான் ரசிகர்களுக்கு நினைவுக்கு வந்தது. பஞ்சாப் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் வென்றால்தான் அரையிறுதி வாய்ப்பு என்ற நிலை சென்னை அணிக்கு ஏற்பட்டது. அப்போது கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. இர்பான் பதான் வீசிய ஓவரில் 4,2,6,6 என விளாசி த்ரில் வெற்றியை பெற்று தந்தார் டோனி. 

12 ஆண்டுகள்... 

அப்போது அவருக்கு வயது 28. சரியாக 12 ஆண்டுகள் கழித்தும் அதேபோன்ற ஒரு ஆட்டத்தை மும்பைக்கு எதிராக போட்டியில் பார்க்க முடிந்தது. வயது ஆனாலும் அதே வேகம், துடிப்பு, ஃபினிஷிங் ஸ்டைலும் இன்றும் நீடிக்கிறது என்றால், அது கிரிக்கெட்டின் மீது டோனி கொண்டிருக்கும் அர்ப்பணிப்பை வெளிக்காட்டுகிறது.

டக் அவுட்... 

தொடர் தோல்விகளில் இருந்து மீண்டெழும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்கின. முகேஷ் சவுத்ரி வீசிய முதல் ஓவரில் 2வது பந்தில் மிட்-ஆனில் மிட்செல் சான்ட்னரிடம் ஒரு எளிய கேட்ச் கொடுத்து டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார் மும்பை கேப்டன் ரோகித் சர்மா. இந்த டக் அவுட் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரு மோசமான சாதனை ஒன்றை படைத்தார் ரோகித். ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா நிகழ்த்தினார். அனைத்து ஐபிஎல் தொடர்களையும் சேர்த்து 14 முறை டக் அவுட் ஆகி இந்த மோசமான சாதனையை படைத்தார். முன்னதாக ரோகித் ஷர்மா, பியூஷ் சாவ்லா, ஹர்பஜன்சிங், மந்தீப் சிங், பார்த்தீவ் படேல் ஆகிய அனைவரும் 13 முறை டக் அவுட் ஆகி இருந்த நிலையில், மற்ற அனைவரையும் முந்திச் சென்றுவிட்டார் மும்பை கேப்டன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து