முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நோபால் குறித்த சர்ச்சை: டெல்லி அணியின கேப்டன் ரிஷப் பண்டுக்கு அபராதம் !

சனிக்கிழமை, 23 ஏப்ரல் 2022      விளையாட்டு
Rishabh-Pund-2022-04-23

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது நோபால் குறித்து எழுந்த சர்ச்சையில் சிக்கிய டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்டுக்கு 100 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் வெற்றி...

ஐபிஎல் கிரிக்கெட் போடியில் 34-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் - டெல்லி அணிகள் மோதினர். இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 222 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 207 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

மெக்காய் பந்துவீச்சு...

இந்த போட்டியின் இறுதி ஓவரில் டெல்லி அணிக்கு 36 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை ராஜஸ்தான் அணியின் மெக்காய் வீசினார். இவர் முதல் 2 ஓவரில் மட்டும் 32 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார். கடைசி ஓவரின் முதல் 3 பந்துகளை பவல் சிக்சர் விளாசினார்.  3 -வது பந்து இடுப்புக்கு சற்று உயரமாக வந்ததாக வெளியில் இருந்த டெல்லி அணியினர் கூறினார். ஆனால் அதை களத்தில் இருந்த நடுவர் ஏற்க மறுத்து விட்டார். இதனால் ரிஷப் பண்ட் களத்தில் இருந்த 2 வீரர்களையும் வெளியே வருமாறு கை சைகை காட்டினார். 

நடுவரிடம் முறையீடு...

களத்தில் இருந்த நடுவரிடம் சென்று டெல்லி அணியின் உதவி பயிற்சியாளர் முறையிட்டார். இதனையடுத்து முடிவு டிவி நடுவரிடம் சென்றது. அதனை டிவி அம்பர் நோபால் இல்லை என அறிவித்தார். இதனையடுத்து டெல்லி அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

3 பேருக்கு அபராதம்...

ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்டுக்கு 100 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த அணியின் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாகூருக்கு போட்டியில் இருந்து 50 சதவீதமும், உதவி பயிற்சியாளர் பிரவீன் ஆம்ப்ரேவுக்கு 100 சதவீதம் அபராதமும் ஒரு போட்டிக்கும் தடை விதிக்கப்பட்டது.

வாட்சன் கண்டனம்

ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி போட்டியில் டெல்லி அணிக்கு கடைசி ஓவரில் 36 ரன்கள் தேவைப்பட்டது. இந்நிலையில் கடைசி ஓவரில் நடந்த செயல் தனக்கு வருத்தத்தை தருவதாக டெல்லி அணியின் மற்றொரு துணை பயிற்சியாளர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது., கடைசி ஓவரில் நடந்த சம்பவம் வருந்ததக்கது. நடுவரின் முடிவு, அது சரியோ தவறோ அவற்றை ஏற்றுகொள்ள வேண்டும். நடுவர்களிடம் வாக்குவாதம் செய்ய ஒருவர் களத்திற்கு வருவது ஏற்றுகொள்ளக்கூடியது அல்ல. நடுவர்கள் தான் விளையாட்டின் போது ஏற்படும் பிரச்சனையை சரி செய்ய வேண்டிய பொறுப்பில் உள்ளனர். அவர்களிடம் தவறாக நடந்துகொள்ளக்கூடாது. இவ்வாறு ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து