முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3-வது நடுவர் தலையிட்டு இருக்க வேண்டும்: நோபால் விவகாரத்தில் ரிஷப் பண்ட் அதிருப்தி

சனிக்கிழமை, 23 ஏப்ரல் 2022      விளையாட்டு
Rishabh-Pund-1-2022-04-23

நோபால் விவகாரத்தில் 3-வது நடுவர் தலையிட்டு இருக்க வேண்டும் என்று டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் வெற்றி...

மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 222 ரன் குவித்தது. பின்னர் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 207 ரன் எடுத்தது. இதனால் ராஜஸ்தான் 15 ரன்னில் வெற்றி பெற்றது.

டெல்லி முறையீடு...

டெல்லி அணியின் வெற்றிக்கு ஆட்டத்தின் கடைசி ஓவரில் 36 ரன் தேவைப்பட்டது. மெக்காய் வீசிய அந்த ஓவரின் முதல் 3 பந்தில் போவெல் 3 சிக்சர் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 3-வது பந்து இடுப்பு உயரம் அளவுக்கு வீசப்பட்டதாகவும், இதற்கு நோபால் கொடுக்க வேண்டும் என்றும் டெல்லி அணியினர் முறையிட்டனர். இதற்கு ஆடுகள நடுவர் நோபால் கொடுக்க மறுத்தார். இதனால் மைதானத்துக்கு வெளியே இருந்த டெல்லி அணி கேப்டன் ரி‌ஷப்பண்ட் விரக்தி அடைந்தார். தனது பேட்ஸ்மேன்களை ஆடுகளத்தை விட்டு வெளியே வருமாறு சைகை செய்ததால் பரபரப்பு நிலவியது.

கடைசி வாய்ப்பு...

நோபால் கொடுக்கப்பட்டதால் டெல்லி கேப்டன் ரி‌ஷப்பண்ட் கடும் அதிருப்தி அடைந்தார். போட்டி முடிந்த பிறகு அவர் இது தொடர்பாக கூறியதாவது:- ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சு நன்றாக இருந்தது. ஆனால் இறுதியில் போவெல் எங்களுக்கு ஒரு வாய்ப்பை கொடுத்தார். நோபால் எங்களுக்கு விலை மதிப்பற்றதாக இருந்து இருக்கும் என நினைத்தேன். ஆனால் அது என் கட்டுப்பாட்டில் இல்லை.

மிகுந்த ஏமாற்றம்...

நோபால் கொடுக்காதது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. அனைவருக்கும் நோபால் என்று தெரிந்தது. இதில் 3-வது நடுவர் தலையிட்டு அது நோபால் என்று கூறி இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் நான் விதியை மாற்ற முடியாது. எனது குழுவை களத்திற்கு அனுப்பியது வெளிப்படையாக சரியானது இல்லை. அது பதற்றமான நேரமாகும். இது இரு தரப்பினரின் தவறு என்று நான் நினைக்கிறேன். நாங்கள் இலக்கை நெருங்கி வந்ததால்தான் இந்த முடிவு கொஞ்சம் வலிக்கிறது. எங்களது பவுலர்கள் இன்னும் சிறப்பாக பந்து வீசி இருக்க வேண்டும். இவ்வாறு ரி‌ஷப்பண்ட் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து