முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரிக்கெட் அகாடமியை துவக்கிய கேதார் ஜாதவ்

சனிக்கிழமை, 23 ஏப்ரல் 2022      விளையாட்டு
Kedar-Jadhav-2022-04-23

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் 37 வயதான கேதார் ஜாதவ். 2014 முதல் 2020 வரையில் இந்திய அணியில் விளையாடியவர் 2019 உலகக் கோப்பை தொடரிலும் விளையாடி இருந்தார். 2021 ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி இருந்தார். நடப்பு சீசனில் அவரை எந்தவொரு அணியும் ஏலத்தில் வாங்கவில்லை. இந்நிலையில், அவர் கிரிக்கெட் உலகில் தனது புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார் .

தனது சொந்த ஊரான புனே நகரில் கிரிக்கெட் அகாடமியை தொடங்கியுள்ளார் ஜாதவ். இதனை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் அவர். இந்த முயற்சியை திரைப்பட தயாரிப்பாளர் ஒருவருடன் இணைந்து மேற்கொண்டுள்ளார். "புனித் பாலன் - கேதார் ஜாதவ் கிரிக்கெட் அகாடமி தொடங்கி உள்ளதை அறிவிப்பதில் மகிழ்ச்சி. விளையாட்டில் சாதிக்க வேண்டும் என துடிக்கும் வீரர்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்கு சாதகமான சூழலையும், சிறந்த வசதிகளையும் ஏற்படுத்துவோம். இதன் மூலம் பல்வேறு பார்மெட் கிரிக்கெட்டில் ஆடவர் மற்றும் மகளிருக்கு வாய்ப்புகள் அமைத்துக் கொடுப்போம்" என தெரிவித்துள்ள ஜாதவ்.

டெல்லி கேப்டன் ரி‌ஷப்பண்டுக்கு  பீட்டர்சன், அசாருதீன் கண்டனம்

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி கேப்டன் ரி‌ஷப்பண்ட் கடும் கோபத்துடன் காணப்பட்டார். ‘நோ பால்’ கொடுக்காததால் அவர் அதிருப்தி அடைந்து ஆடுகளத்தை விட்டு வீரர்களை வெளியே வருமாறு சைகை செய்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரி‌ஷப்பண்ட் நடந்து கொண்ட செயலுக்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கடும் விமர்சனத்துக்கும் உள்ளாகி இருக்கிறார்.

இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன், ரி‌ஷப்பண்ட் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, “இது கிரிக்கெட், கால்பந்து அல்ல. நீங்கள் (ரி‌ஷப்பண்ட்) வீரர்களை அழைத்த முடிவை ஏற்றுக் கொள்ள இயலாது. உங்களால் அதை செய்ய முடியாது. பயிற்சியாளர் பாண்டிங் இருந்து இருந்தால் இப்படி நடந்து இருக்காது” என்றார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் கூறும்போது, “ரி‌ஷப்பண்டின் விளையாட்டில் மோசமான செயலை ஏற்படுத்தி விட்டார். கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன் விளையாட்டு, இதனால் அவரது நடத்தை முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாது” என்றார்.

தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட்: மாக்னஸ் கார்ல்சன் பாராட்டு

சர்வதேச சம்மேளனம் கேட்டுக் கொண்ட மறு வினாடியே தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அதற்கு பச்சைக்கொடி காட்டினார். இதையடுத்து போட்டிக்கான ஏற்பாடுகள் தடல் புடலாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவது குறித்து உலகின் நம்பர் 1 வீரரான நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் கருத்து தெரிவித்துள்ளார். அதில் இவ்வளவு குறைந்த இடைவெளியில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை இந்தியா அதுவும் தமிழ்நாடு ஏற்று நடத்துவது மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். 

செஸ் மீது தமிழ்நாடு கொண்டுள்ள மரியாதையே இதற்கு காரணம் என்றும் கார்ல்சன் பெருமிதம் தெரிவித்துள்ளார். மாமல்லபுரம் போட்டியில் தாமும் பங்கேற்கலாம் என்றும் அவர் வியூகம் தெரிவித்துள்ளார். இவர் 9 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் விஸ்வநாதன் ஆனந்தனை வீழ்த்தி உலக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது நினைவுகூறத்தக்கது.  

ஆசிய மல்யுத்தம் சாம்பியன்ஷிப்: அன்ஷு, ராதிகாவுக்கு வெள்ளி

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அன்ஷு மாலிக், ராதிகா ஆகியோர் வியாழக்கிழமை வெள்ளிப் பதக்கம் வென்றனர். மகளிருக்கான 57 கிலோ பிரிவில் நடப்புச் சாம்பியனாக களம் கண்ட அன்ஷு, முதல் சுற்றில் உஸ்பெகிஸ்தானின் ஷோகிடா அக்மிதோவாவை வீழ்த்த, அடுத்த சுற்றில் சிங்கப்பூரின் டேனியல் சூ சிங் லிம்மை தோற்கடித்தார். தொடர்ந்து அரையிறுதியில் மங்கோலியாவின் போலோர்துயா குரெல்கூவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு வந்தார். அதில் ஜப்பானின் சுகுமி சகுராயிடம் வீழ்ந்து வெள்ளி பெற்றார்.

அன்ஷு தற்போது பெற்றிருப்பது இப்போட்டியில் அவரது 3-ஆவது பதக்கமாகும். இதற்கு முன் அவர் 2020-இல் வெண்கலமும், 2021-இல் தங்கமும் வென்றுள்ளார். அதேபோல், 65 கிலோ பிரிவு இறுதிச்சுற்றில் ராதிகா - கஜகஸ்தானின் டரிகா அபெனிடம் வீழ்ந்து வெள்ளிப் பதக்கத்தை தனதாக்கினார். மற்றொரு இந்தியரான மனீஷா 62 கிலோ பிரிவு முதல் சுற்றில் கஜகஸ்தானின் அயாலிம் கேசிமோவாவை வீழ்த்தினார். எனினும், அரையிறுதியில் ஜப்பானின் நோனோகா ஒஸாகியிடம் தோல்வியைத் தழுவினார். இதையடுத்து வெண்கலப் பதக்கத்துக்கான சுற்றில் தென் கொரியாவின் ஹன்பித் லீயை வென்று பதக்கத்தை கைப்பற்றினார் மனீஷா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து