முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புறக்கனிக்கப்பட்ட ஒரு கிராமத்தின் கதை அட்ரஸ்

சனிக்கிழமை, 23 ஏப்ரல் 2022      சினிமா
Address 2022-04-23

Source: provided

காக்டைல் சினிமா சார்பில் அஜய் கிருஷ்ணா தயாரித்திருக்கும் படம் ‘அட்ரஸ்’. குங்கும பூவும் கொஞ்சும் புறாவும், வானவராயன் வல்லவராயன் போன்ற படங்களை இயக்கிய இராஜமோகன் இப்போது இப்படத்தை இயக்கியுள்ளார். அதர்வா முரளி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, இசக்கி பரத், புதுமுகம் தியா, ஏ.வெங்கடேஷ், தம்பிராமையா போனறோர்  நடித்துள்ளார்கள். அட்ரஸ் படத்தின் அனைத்து பணிகளும் தற்போது முடிந்த நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. விழாவில் இயக்குனர் இராஜமோகன் பேசுகையில், ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிரச்சனை இருக்கும்,  ஒவ்வொரு கிராமத்திற்கு ஒவ்வொரு பிரச்சனை இருக்கும். நம் நாட்டு கிராமங்கள் கணினி மயமாகிறது என பல தலைவர்கள் கூறுகிறார்கள். 1956-ல் மொழிவாரி மாநிலமாக பிரிக்கிற போது தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் நடுவில் சிக்கி கொண்டு தனது ‘அட்ரஸை’ தொலைத்த ஒரு கிராமம் இருக்கிறது. அந்த கிராமத்துக்கு அட்ரஸ் கிடைத்ததா இல்லையா என்பதே இப்படத்தின் கதை என்றார். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு சமூக படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு  கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்,

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து