முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உதயநிதி வெளியிட்ட தி வாரியர் பட பாடல்

சனிக்கிழமை, 23 ஏப்ரல் 2022      சினிமா
Uthayanidhi 2022-04-23

Source: provided

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தி வாரியர். இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். சீனிவாச சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் ஜூலை 14-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு முதல் பாடலை வெளியிட்டார். 'புல்லட்' என தொடங்கும் அந்த பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். இந்த பாடல் வெளியீடு குறித்து நடிகர் உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகர் ராம் பொத்தினேனி அவர்களுக்கு வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!