முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செர்பியா ஓபன் டென்னிஸ்: டி ஜோகோவிச்சை வீழ்த்தி ஆண்ட்ரே ரூப்லெவ் சாம்பியன்

திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2022      விளையாட்டு
Andrei-Rublev 2022-04-25

டென்னிஸ் தரவரிசையில் உலக அளவில் நம்பர் 1 வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை போராடி வீழ்த்தி ஆண்ட்ரே ரூப்லெவ் சாம்பியன் பட்டம் வென்றார்.

முதல் செட்டில்...

செர்பியா ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ் மோதினர். முதல் செட்டை ஆண்ட்ரே ரூப்லெவ் 6- 2 என எளிதில் வென்றார். இரண்டாவது சுற்றில் ஜோகோவிச் 7-6 என கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது சுற்றில் சுதாரித்து ஆடிய ரூப்லெவ் 6-0 என கைப்பற்றினார்.

சாம்பியன் பட்டம்...

இறுதியில், ரூப்லெவ் 6-2, 6-7(4), 6-0 என்ற செட் கணக்கில் நம்பர் 1 வீரரான ஜோகோவிச்சை வென்று சாம்பியன் பட்டத்தை வென்றார். இந்த போட்டி மொத்தம் இரண்டு மணி நேரம் 29 நிமிடங்கள் நடைபெற்றது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து