முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொல்லார்ட்-க்கு முத்தம் கொடுத்து வழியனுப்பிய குருனால் பாண்டியா

திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2022      விளையாட்டு
Kurunal-Pandya 2022-04-25

Source: provided

ஐபிஎல் 15வது சீசன் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த தொடரில் நடைபெற்ற  37-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை மோதின. முதல் வெற்றியை தேடி சொந்த மைதானத்தில் களம் கண்ட மும்பை அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியிடம் தோல்வி அடைந்தது. நடப்பு தொடரில் ஒரு வெற்றியை கூட பெறாத மும்பை அணி நேற்று 8-வது தோல்வியை சந்தித்தது.

இந்த போட்டியில் மும்பை அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் பொல்லார்ட் 19 ரன்களில் மும்பை அணியின் முன்னாள் வீரர் குருனால் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அப்போது பொல்லார்ட் பெவிலியன் நோக்கி நடையைக்கட்ட, அவர் அருகில் சென்ற குருனால் பாண்டியா துள்ளிக்குதித்து பொல்லார்ட் தலையில் முத்தம் கொடுத்தார். ஆட்டமிழந்த விரக்தியில் சென்ற பொல்லார்ட், குருனால் பாண்டியா-விடம் பதிலுக்கு எதுவும் தெரிவிக்காமல் நடையை கட்டினார். இந்த நிலையில் தற்போது மும்பை அணியின் ரசிகர்கள் குருனால் பாண்டியாவிற்கு சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

_________________

ரிஷப் பண்ட்-க்கு குல்தீப் புகழாரம்

டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் இந்த சீசனில் விக்கெட் வேட்டை நிகழ்த்தி வருகிறார்.  இதுவரை நடைபெற்ற 7 போட்டிகளில் 13 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இந்த நிலையில் டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட், டோனியை போன்று சரியான திசையில் வழிநடத்துவதாக குல்தீப் யாதவ் புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து குல்தீப் யாதவ் கூறுகையில், ''சுழற்பந்து வீச்சாளர்களின் வெற்றியில் விக்கெட் கீப்பர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. அந்தவகையில் இம்முறை எனது எழுச்சிக்கு டெல்லி அணியின் கேப்டனும் விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட்தான் காரணம். உரிய நேரத்தில் நல்ல ஆலோசனை வழங்குவார். எங்களுக்குள் நல்ல புரிதல் உள்ளது. ஸ்டம்புக்கு  பின்னால் நின்று தேவையான ஆலோசனை வழங்குகிறார். களத்தில் மிகவும் 'கூலாக' செயல்படுகிறார். எம்எஸ் டோனியை போன்று சரியான திசையில் அவர் வழிநடத்துகிறார்.

______________

எம்.எஸ்.டோனிக்கு சி.எஸ்.கே பயிற்சியாளர் ஹஸ்ஸி புகழாரம்

சென்னை சூப்பர் கிங்ஸ் பகிர்ந்த வீடியோவில், முன்னாள் ஆஸ்திரேலிய மிடில்-ஆர்டர் பேட்டரும், சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளருமான மைக்கேல் ஹஸ்ஸி, முன்னாள் சிஎஸ்கே கேப்டன் டோனியின் வியூகம் எப்படி என்றும் பதட்டமான சேசிங்குகளில் அவரது மனதில் என்ன கணக்குகள் செல்கின்றன என்பதையும் விளக்கினார். 

“டோனி சுவாரசியமானவர், ஏனென்றால் அவர் ஆட்டத்தின் மத்தியில் அதனை போக்கை மிகவும் கணக்கிடக்கூடியவர். அதாவது, நாங்கள் அவருடன் நடுவில் உரையாடுகிறோம். மேலும் நிகர ரன் ரேட் அதிகரித்து வருவதால் நான் கொஞ்சம் பயப்படத் தொடங்குவேன். நான் அடிக்க வேண்டும் என்றாலும், அவர், ‘கவலைப்படாதே, அவர்கள் இன்னும் பந்து வீசப் போகிறார்கள், எங்கு பந்து வீசுவது என்று அவருக்குத் தெரியாது, நாம் இலக்கை நோக்கிச் செல்ல வேண்டும்’ என்று அவர் இறுதி வரை செய்ய வேண்டிய அனைத்தையும் கணக்கிட்டுக் பேசுவார்” என்று சிஎஸ்கே வெளியிட்ட வீடியோவில் ஹஸ்ஸி கூறினார்.

___________________

வித்தியசமான முறையில் அவுட்: வைரலாகும் இஷான் வீடியோ!

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில்., மும்பை அணியின் இஷான் கிஷான் விநோதமான முறையில் அவுட்டாகி வெளியேறிய வீடியோ வைரலாகி வருகிறது. 169 ரன்கள் என்ற இலகுவான இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணிக்கு ரோகித் ஷர்மா சிறப்பாக விளையாடி துவக்கம் தர, அவருக்கு துணையாக இஷான் கிஷன் நிலையான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார். எதிர்கொண்ட முதல் 19 பந்துகளில் 8 ரன்களை மட்டுமே எடுத்து மிகப் பொறுமையாக ஆடினார் இஷான். ஆனால் ரவி பிஷ்னாய் வீசிய பந்தில் எதிர்பாராதவிதமாக இஷான் கிஷன் விநோதமாக அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.

தூரமாகச் சென்ற பந்தை இஷான் அடிக்க, பந்து எட்ஜ் ஆகி லக்னோவின் விக்கெட் கீப்பர் குயின்டன் டி காக்கின் ஷூவில் பட்டு, எகிறி முதல் ஸ்லிப்பில் இருந்த ஜேசன் ஹோல்டரிடம் கேட்ச் ஆனது. மூன்றாம் நடுவர் இந்த அவுட்டை உறுதிசெய்ய நடையைக் கட்டினார். கூடவே மும்பையின் வெற்றியும் நடையைக் கட்டிவிட்டது. இஷான் கிஷன் விநோதமான அவுட்டான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

___________________

சாஹாவுக்கு மிரட்டல் விவகாரம்: பத்திரிகையாளர் மீது நடவடிக்கை?

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹா. முன்னாள் கேப்டன் டோனியின் ஓய்வுக்கு பிறகு இவர் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் கடந்த சில ஆண்டுகளாக விக்கெட் கீப்பராக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் தற்போது நடந்து வரும் இலங்கை அணிக்கு எதிரான  டெஸ்ட் தொடரில் இவர் தேர்வுசெய்யப்படவில்லை. தான் தேர்வு செய்யப்படாதது குறித்து அவர் பகிரங்க குற்றசாட்டை வெளியிட்டார். அதில் "தன்னை ஓய்வு பெறுமாறு இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வற்புறுத்தியதாக தெரிவித்தார்.

இதன் பின்னர் வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்ட விளையாட்டு பத்திரிகையாளர் குறுஞ்செய்தியின் மூலம் கேலி செய்தி மிரட்டியதாக விருத்திமான் சாஹா அடுத்த பகிரங்க குற்றசாட்டை முன்வைத்தார். இது குறித்து அந்த பத்திரிகையாளர் உடன் நடந்த உரையாடல் குறுஞ்செய்தியை விருத்திமான் சாஹா வெளியிட்டார். ஆனால் அந்த பத்திரிகையாளர் பெயரை அப்போது அவர் வெளியிடவில்லை. பின்னர் பிசிசிஐ விருத்திமான் சாஹா-விடம் முழுமையான விசாரணை நடத்தியது. இந்த நிலையில் அந்த பத்திரிக்கையாளர் மீது தற்போது பிசிசிஐ கடுமையான நடவடிக்கை எடுக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

___________________

இயற்கை விவசாயத்திலும் ஆர்வம் காட்டும் டோனி

இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன்களுள் ஒருவராக விளங்கி வந்த டோனி கடந்த 2019 ஆம் ஆண்டு அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெற்றார். தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடி வரும் அவர் விவசாய பண்ணை வளர்ப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் தற்போது அவர் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஜாபுவாவிலிருந்து சுமார் 2,000 கடக்நாத் வகை கோழிக் குஞ்சுகளை வாங்கியுள்ளார். 

இது அந்த மாநிலத்தின் ஒரு வகையான நாட்டுக்கோழியாகும். கடக்நாத் கோழிக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. இந்த வகை கோழிகளில் மருத்துவ குணம் அதிகம் உள்ளது. விளையாட்டு வீரர்களின் உணவு முறையில் இந்த கோழி இறைச்சி இருக்க வேண்டும் என ஆராச்சியாளர்கள் பிசிசிஐ-க்கு வலியுறுத்தி இருந்தனர். தனது ஓய்விற்கு பிறகு தொடர்ந்து விவசாயத்தில் டோனி ஆர்வம் காட்டி வருகிறார். தனது சொந்த மாநிலமான ராஞ்சியில் அவர் ஏற்கனவே இயற்கை முறையில் விவசாயம் நடக்கும் பண்ணை ஒன்றை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

__________________

ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் சாம்பியன்

ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் ஜெர்மனியில் ஸ்டட்கர்ட் நகரில் நடைபெற்று வந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் பெலாரஸைச் சேர்ந்த முன்னணி வீராங்கனையான சபலென்காவுடன் மோதினார்.

1 மணி 24 நிமிடங்கள் இந்த போட்டியில் ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய இகா ஸ்வியாடெக், 6-2, 6-2 என்ற செட் கணக்கில் சபலென்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இதன்மூலம் ஸ்வியாடெக் தனது 7-வது டபிள்யூ.டி.ஏ டூர் ஒற்றையர் பட்டத்தை வென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து