முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடர் தோல்வியால் வெளியேற்றம்: பலரும் தோல்வி அடைந்துள்ளதாக மும்பை கேப்டன் ரோஹித் பேட்டி

திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2022      விளையாட்டு
Rohit-Sharma 2022-04-25

Source: provided

மும்பை : விளையாட்டு ஜாம்பவான்கள் பலரும் தோல்விகளை எதிர்கொண்டுள்ளார்கள் என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

லக்னோ வெற்றி...

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மும்பைக்கு எதிரான ஆட்டத்தை 36 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது லக்னோ அணி. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. பிறகு விளையாடிய மும்பை அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்துத் தோல்வியடைந்தது. 62 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த லக்னோ கேப்டன் கே.எல். ராகுல் ஆட்ட நாயகனாகத் தேர்வானார். 

பிடித்துள்ளது...

இந்த வருட ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடிய 8 ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளது. ஆட்டத்துக்குப் பிறகு ட்விட்டரில் ரோஹித் சர்மா கூறியதாவது.,  இந்தமுறை சிறந்த ஆட்டத்திறனை நாங்கள் வெளிப்படுத்தவில்லை. ஆனால் இதுபோல சிலசமயங்களில் நடக்கும். விளையாட்டு ஜாம்பவான்கள் இத்தருணத்தை எதிர்கொண்டுள்ளார்கள். இந்த அணியும் அதன் சூழலும் எனக்குப் பிடித்துள்ளது. மும்பை அணி மீது எப்போதும் நம்பிக்கை வைக்கும் ரசிகர்களுக்குப் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து