முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பைக்கு எதிராக பந்துவீசுவதில் தாமதம்: லக்னோ கேப்டன் ராகுலுக்கு 24 லட்சம் ரூபாய் அபராதம் !

திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2022      விளையாட்டு
KL-Rahul 2022-04-25

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கே எல் ராகுலுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதிக நேரம்...

ஐ.பி.எல். தொடரில் நடைபெற்ற  போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ அணிகள்  மோதின. இந்த ஆட்டத்தில் லக்னோ அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த நிலையில் போட்டியில் லக்னோ அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் கேப்டன் கே எல் ராகுலுக்கு  ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  மேலும் லக்னோ அணி வீரர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் போட்டி கட்டணத்தில் 25 சதவீதம் அல்லது 6 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்ட்டுள்ளது.

ஏற்கனவே அபராதம்...

நடப்பு தொடரில் ஏற்கனவே ஒருமுறை பந்துவீச அதிக நேரம் எடுத்து கொண்டதால் கேஎல் ராகுலுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பெங்களூரு அணிக்கு எதிராண ஐபிஎல் போட்டியில் விதிமுறைகளை மீறியதாக லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுலுக்கு போட்டிக் கட்டணத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஆட்டத்தில் தடை...

இன்னொரு ஆட்டத்தில் லக்னோ அணி, ஓவர்களை வீசி முடிக்கக் கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டால் ஐபிஎல் விதிமுறைகளின்படி ஓர் ஆட்டத்தில் விளையாட கே.எல். ராகுலுக்குத் தடை விதிக்கப்படும். இதனால் இனி வரும் ஆட்டங்களில் புதிய நெருக்கடியை அவர் எதிர்கொண்டுள்ளார். 

2 முறை அபராதம்...

என்ன விதிமீறலுக்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது என தகவல் வெளிவரவில்லை. எனினும் தவறை கே.எல்.ராகுலே ஒப்புக்கொண்டுள்ளதால் லெவல் 1 விதிப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த தொடரில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால்  மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மாவிற்கு 2 முறை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து